அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது. அதில் ஒரு கட்டமாக இருவது ஓவர் போட்டி அணிக்கு ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து செயல்பட்டு வருகிறது. ஆனால் ஹர்திக் பாண்டியா முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து இந்திய அணியை அதல பாதாளத்திற்கு தள்ளி வருகிறார்.

சமீபத்தில் நடந்த போட்டிகளில் அது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. வித்தியாசமாக செய்கிறேன், வீரர்களை ஊக்குவிக்கிறேன், புது முயற்சியை பயன்படுத்துகிறேன் என்றெல்லாம் கூறி இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்து செல்வது இவரது தன்னம்பிக்கையான செயல்பாடுகள் என்று கூறிக் கொள்கிறார்.

Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார். குறிப்பாக 20 ஓவர் போட்டிகளில் இவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. புது முயற்சி எடுக்கிறேன் என்று தேவையில்லாத வீரர்களை அணியில் சேர்த்து வருகிறார். இதற்கு சமீபத்தில் நடந்த இருவது ஓவர் போட்டிகள் ஒரு எடுத்துக்காட்டு.

முதல் பேட்டிங் சாதகமான ஆடுகளத்தில் வித்தியாசமான முயற்சி என்று சேசிங் தேர்ந்தெடுக்கிறார். சேசிங் சாதகமான போட்டிகளில் பேட்டிங் தேர்ந்தெடுக்கிறார். எங்களுக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை வித்தியாசமான அனுபவம் தான் வேண்டும் என்கிறார். இது நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த இரண்டு போட்டிகளில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Also Read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

குறிப்பாக கடைசியாக நடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களை எடுத்து அவர்களுக்கு ஓவர் கொடுக்காமல் சுழற் பந்தையே பயன்படுத்தினார். இதை கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சரியாக செயல்படாத சிவம் மாவி மற்றும் ஹர்ஸ் தீப் சிங் போன்ற வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து எதிரணிக்கு வெற்றிப் பாதையை உருவாக்கிக் கொடுக்கிறார்.

இப்படி செயல்படுவது இந்திய அணி ரசிகர்களை பெரிய அளவில் எரிச்சல் அடைய செய்கிறது. குறிப்பாக ஹர்ஸ் தீப் சிங் வீசும் நோ 98+0000பா2ல் பந்துகள் எதிர் அணிக்கு 50 -60 ரன்கள் கூடுதலாக எடுக்க உதவுகிறது. ஏன் ஹார்திக் பாண்டியா இப்படி பண்ணுகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்