அதிகமான சம்பளம் வாங்கும் 7 டாப் ஹீரோக்கள்.. விஜய், ரஜினியை விட டாப்புக்கு போன காங் நடிகர்

Top 7 highest paid heroes: சில முன்னணி நடிகர்களை மட்டும் தான் நம்பி அதிக பட்ஜெட் படங்களை பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருவது வழக்கம். அதற்கு காரணம் அவர்களால் மட்டும் தான் வணிக ரீதியாக பண மழையில் நனைய முடியும் என்பதினால். அத்துடன் இவர்கள் நடித்தால் தான் மாஸாக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு ஹைப்பை ஏற்படுத்த முடியும்.

இந்த ஒரு காரணத்தினாலேயே முன்னணி நடிகர்களின் சம்பளமும் ஒவ்வொரு படத்திற்கு ஒரு முறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி இந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்கள் யாரெல்லாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சல்மான் கான்: கிட்டத்தட்ட 80 படங்களுக்கும் மேலாக நடித்து பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். கடந்தாண்டு வெளிவந்த பதான், கிசி கா பாய் கிசு கி ஜான், டைகர் 3 இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றுவிட்டது. அந்த வகையில் இவருடைய சம்பளம் 120 கோடி வாங்கி ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

பிரபாஸ்: இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார். அதனாலேயே இவர் நடிக்கக்கூடிய படங்களில் அதிக எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவுமே சொல்ற அளவுக்கு பெருசாக மக்களிடம் ஈடுபடவில்லை. இருந்தாலும் 140 கோடியை வாங்கி ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

கமல்: கமர்சியல் படங்களை கொடுத்து வணிக ரீதியாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர் இல்லை. அதனாலேயே ஏற்ற இறக்கமாக வெற்றி பெற்று நடுநிலையாக நடித்துக் கொண்டு வந்தார். அப்படிப்பட்ட இவரை வைத்து லோகேஷ் விக்ரம் படத்தை எடுத்ததன் மூலம் புத்துணர்ச்சி பெற்று அடுத்தடுத்து லாபத்தை சம்பாதிக்க பயணித்து வருகிறார்.

அத்துடன் இவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் துவண்டு போய் இருந்தது. இவருக்கு விக்ரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றி மூலம் அதை தூசி தட்டி கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும் இவருடைய சம்பளம் 150 கோடி. தற்போது இவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

உச்சத்தில் இருக்கும் கிங்காங் ஹீரோ

அமீர்கான்: ஹிந்தி திரையுலகில் மாஸாக வலம் வரக்கூடியவர் தான் அமீர்கான். அப்படிப்பட்ட இவர் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றே சொல்லலாம். அந்த வகையில் இவருடைய சம்பளம் 175 கோடி. தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறார்.

விஜய்: ஆட்ட நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் அடுத்தடுத்த படங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இவரை வைத்து தான் தயாரிப்பாளர்களும் திரையரங்குகளும் லாபத்தை சம்பாதிக்கிறது என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய சம்பளம் தற்போது 200 கோடி. அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ரஜினி: 74 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அதுவும் இளம் ஹீரோக்களை விட வசூல் அளவில் லாபத்தை கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய சம்பளம் 210 கோடி. தற்போது இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

அந்த வகையில் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் எத்தனையோ போட்டிகள் இருந்தாலும் இவர்களை விட முதலிடத்தில் இன்னொரு நடிகர் அதிக சம்பளத்தை வாங்கி விட்டார். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் கிங்காங் ஷாருக்கான். ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் வசூலில் லாபத்தை பார்த்துட்டு வரும் இவருடைய சம்பளம் 250 கோடி. அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் இவர் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்