கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

இந்தியா, இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் படைகளைக் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வருகிறது இந்திய அணி.

இப்பொழுது இந்திய அணியில் 20 பேர் கொண்ட இளம் அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த 20 பேர் அடங்கிய வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 20 ஓவர் போட்டியை மனதில் வைத்து இந்த வீரர்களை தயார் செய்கின்றனர். அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த 20 பேர் கொண்ட இளம் அணியில் சஞ்சு சம்சன் இடம் பெற்று வருகிறார். ஏற்கனவே இந்திய அணியில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தாலும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தவறி வருகிறார். இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்து அணியில் இடம் பெறுகிறார்.

ஆனால் அவர் இந்திய அணியில் விளையாடும் போது மட்டும் சோபிக்க தவறி விடுகிறார். இப்பொழுது இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் சொதப்பினார். இவர் கொடுத்த எளிதான கேட்சை இலங்கை அணியினர் தவற விட்டனர். அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் தெரியாமல் அவுட் ஆகி விட்டார்.

பேட்டிங்கில் சொதப்பினாலும் பில்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிறைய மிஸ்ஃபில்ட் செய்து இலங்கை அணிக்கு ரன்களை தாரை வார்த்துக் கொடுத்தார். பில்டிங் செய்யும் போது முட்டியில் அடிபட்டு வெளியேறினார். அதன் பின் காயம் காரணமாக தொடர்ந்து இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இப்பொழுது இவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தால் இவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சென்ற ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி அசத்தினார். இப்படி தொடர்ந்து சொதப்பும் சஞ்சு சாம்சன் தற்போது மீண்டும் அணிக்குள் திரும்புவது பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்