விஜய்யை நம்பி மோசம் போன தயாரிப்பாளர்.. சேராத இடத்தில் சேர்ந்து தளபதியை பகைத்துக் கொண்ட புரொடியூசர்!

The producer who trusted Vijay and went bad and The producer who opposed Thalapathy: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே அமைத்துக் கொண்ட தளபதி விஜய் அவர்கள், 

வருங்கால முதல்வராகும் திட்டத்துடன் பல அதிரடியான  செயல்களை செயல்படுத்தி வருகிறார்.

தளபதியின் திரை வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதும், தனக்குரிய ஒவ்வொரு படங்களையும் மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்தார் விஜய். 

அடுத்தடுத்த தோல்வி படங்களால் துவண்டு கொண்டிருந்த தளபதிக்கு குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்கள் மாஸ் இமேஜை உருவாக்கியது.இந்த மூன்று படங்களையும் தயாரித்தது ஏ எம் ரத்தினம் அவர்கள் தான்.

2004 இல் தரணி இயக்கத்தில் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கில்லி திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாது குடும்பங்கள் கொண்டாடும் எவர்கிரீன் திரைப்படம் ஆனது.

அன்றைய காலகட்டத்தில் விஜய்யின் கில்லி வரலாறு காணத அளவு மாபெரும் வசூலை குவித்து தளபதியை கெத்தாக தலை நிமிர செய்தது. இத்திரைப்படத்திற்கு பின் அவரது மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது என்றே கூறலாம்.

இப்படி ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த தளபதி, ஒரு கட்டத்தில் இந்த தயாரிப்பாளருக்கு கால் சீட் கொடுக்க மறுத்த கதையும் உண்டு.

ஒவ்வொரு முறை கால்சீட்க்காக தயாரிப்பாளர் விஜய்யை அணுகும்போது, ஒரு சில காரணங்களை கூறி கால்சீட் கொடுக்காமல் தவிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். 

ஒருமுறை பேட்டி ஒன்றில் விஜய் எனக்கு கால்சிட் தராமல் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று  கூறினார். இதன்பின் ஏ எம் ரத்தினம் மற்றும் விஜய் என்ற கூட்டணி இணையாமலே போனது. 

ஏ எம் ரத்தினம்  மற்றும் அஜித் கூட்டணியில் உருவான மூன்று படங்கள்

கடவுள் இருக்காண்டா குமாரு! என்பது போல் அஜித் அவர்கள், தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தை அழைத்து கால்ஷீட் கொடுத்தார்.

இதற்குப் பின் உருவானது தான், “ஆரம்பம்”, “என்னை அறிந்தால்”, “வேதாளம்” போன்ற திரைப்படங்கள். ஆரம்பம் மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் போனாலும், 

வேதாளம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து  விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பன்மடங்கு லாபத்தை தந்தது. 

சண்டை சண்டையா இருந்தாலும் தற்போது இந்த தயாரிப்பாளர் கில்லி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்து வருவது வேறு கதை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்