சஞ்சய் தத் போல் வழக்கில் சிக்கிய தமன்னா.. பணத்தாசையால் ஏற்பட்ட விபரீதம்

Tamannaah : டாப் நடிகையாக வலம் வந்த தமன்னா தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையவே அக்கட தேசம் சென்றுவிட்டார். ஆனால் நெல்சனின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து படம், வெப்சீரிஸ் என அனைத்திலும் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தமன்னா மீது ஒரு புகார் வந்துள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் பெற்றிருந்தது.

ஐபிஎல் தொடரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ஜியோ சினிமா செயலில் வியாகாம் நிறுவனம் ஒளிபரப்பு செய்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்காமல் ஃபேர்பிளே என்ற செயலி ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்தது.

தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய சைபர் போலீஸ்

சட்டவிரோதமாக ஃபேர்பிளே செயலி ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்ததால் வியாகாம் நிறுவனம் இந்த செயலி மீது வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்நிலையில் ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

இதனால் இந்த வழக்கில் தமன்னாவும் ஆஜராக வேண்டும் என மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும் இதே விளம்பரத்தில் லியோ பட வில்லன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் நடித்திருந்தார்.

அவருக்கு கடந்த 23 ஆம் தேதி சமன் அனுப்பிய நிலையில் இந்தியாவில் அவர் இல்லை என்று பதிலளித்திருந்தார். இதனால் வேறு ஒரு நாளில் சஞ்சய் தத்தும் ஆஜராக வேண்டும். மேலும் பணத்த ஆசையால் இப்போது சஞ்சய் தத் போல விபரீதத்தை சந்தித்திருக்கிறார் தமன்னா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்