மனுஷி படத்தில் நடிக்க தயங்கிய 3 நடிகைகள்.. துணிச்சலாக இறங்கிய ஆண்ட்ரியா 

Andrea : அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் கோபி நாயினார். இவர் இப்போது மனுஷி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, நாசர், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் மனுஷி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதாவது அறம் படத்தைப் போல கதாநாயகி முக்கியத்துவம் தரும் படமாகத்தான் மனுசி படம் உருவாகி வருகிறது. அதாவது நிறைய கிராமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியராக இருக்கிறார் ஆண்ட்ரியா.

மனுஷி படத்தில் நடிக்க தயங்கிய நடிகை

அவரை தீவிரவாதி என வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்து விசாரணை நடத்துகின்றனர். அங்கு கடுமையான சித்திரவதையை அனுபவிக்கும் ஆண்ட்ரியா அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்நிலையில் கோபி நயனார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது இந்த கதாபாத்திரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் என்பதால் மூன்று நடிகை முதலில் அணுகி இருக்கிறார். அதன்படி துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் ஜோதிகாவை அணுகி உள்ளார்.

சில காரணங்களினால் ஜோதிகா மறுத்த நிலையில் அதன் பிறகு சமந்தா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளையும் மனுஷி படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்களும் மறுப்பு தெரிவித்த நிலையில் இப்போது ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படம் இப்போது மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறி இருக்கிறார். இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்