கில்லி ரீ ரிலீஸ் அவ்வளவு சீன் எல்லாம் இல்ல.. சீக்ரெட்டை போட்டு உடைத்த பிஸ்மி

Ghilli Re Release: 20 வருடங்களுக்கு முன்பு விஜய், திரிஷா கெமிஸ்ட்ரியில் வெளியான கில்லி தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. அதை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் முன்பதிவு சாதனை, வசூலில் சாதனை என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது வரை கில்லி 10 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அது அத்தனையும் பொய் பித்தலாட்டம் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். மேலும் இப்படம் கொண்டாடப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை தான்.

கில்லி வசூல் ஒரு வதந்தி

அதற்காக வசூலில் சாதனை என்பதெல்லாம் உண்மை கிடையாது. இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் தான் இதுபோன்று சொல்லி வருகிறார்.

எப்போதுமே அவர் படம் ரிலீஸ் ஆகி முதல் காட்சி முடியும் முன்பே ஹீரோவை பார்த்து மாலை மரியாதை செய்து படம் சூப்பர் ஹிட் என்று சொல்வார். இப்படித்தான் ஜப்பான் படத்துக்கும் விளம்பரம் செய்தனர்.

அப்படித்தான் கில்லி படத்தையும் வசூலில் மாஸ் என பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். உண்மையில் அப்படி கிடையாது என பிஸ்மி குறிப்பிட்டுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்