நான் தான் நம்பர் ஒன் என நிரூபித்த அனிருத்.. ஜிவி பிரகாஷால் கமல் படத்துக்கு வந்த சோதனை

Aniruth: தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் கூப்பிடுங்கள் அனிருத்தை என்று சொல்லும் அளவுக்கு அவர் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ரஜினியின் கூலி டைட்டில் டீசரை கூட இவர் அசத்தியிருந்தார்.

மேலும் இவருக்கும் ஜிவி பிரகாசுக்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக கூட பேசப்பட்டு வருகிறது. அதில் தற்போது நான் தான் நம்பர் ஒன் என அனிருத் நிரூபித்துள்ளார்.

எப்படி என்றால் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர். இப்படத்தின் ஆடியோ உரிமை கிட்டத்தட்ட 16 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

நம்பர் ஒன் இடத்தை பிடித்த அனிருத்

இதற்கு ஹீரோ ஒரு காரணம் என்றாலும் அனிருத்தின் இசைதான் முக்கிய அம்சமாக உள்ளது. ஏனென்றால் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஆனால் இப்படத்தின் ஆடியோ உரிமை 10 கோடிக்கு தான் விற்பனையாகி இருக்கிறது. இதிலிருந்தே பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அனிருத் இசையமைத்தால் நல்ல லாபம் என்று தெரிகிறது.

அதன் காரணமாகவே முன்னணி நிறுவனங்கள் பாடல் லேட்டானாலும் பரவாயில்லை என அனிருத்தை தேடி செல்கின்றனர். அதற்கேற்றவாறு பாடல்களும் சோசியல் மீடியா ட்ரெண்டாக மாறி வருகிறது.

சமீபத்தில் கூட கோட் படத்தில் யுவனின் இசை ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போதே அனிருத் இருந்தால் நன்றாக இருக்கும் என பேசப்பட்டது. இப்படியாக நான் தான் நம்பர் ஒன் என அவர் நிரூபித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்