இந்த கொசுதொல்லை தாங்க முடியல..! கில்லிக்கு போட்டியா வாண்டடா களம் இறங்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

An Action hero re-release his movie competes with Ghilli: தொட்டதெல்லாம் பொன் என்பது போல் தளபதி நடிக்கும் படங்கள் ஆனாலும் சரி, நடித்த படங்கள் ஆனாலும் சரி எப்போது திரையிட்டாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் தளபதியின் கில்லி திரைப்படம் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளுக்கு மேல் ரீ ரிலீஸ்ஆகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ஏ எம் ரத்னம் தயாரிப்பில்  தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் கில்லி.

விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், மயில்சாமி, ஆஷிஷ் வித்யார்த்தி என பல நட்சத்திர பட்டாளங்களுடன், சென்னை மற்றும் மதுரை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷனில் பின்னி பெடல் எடுத்தது தான் கில்லி.

கபடி விளையாட்டை மையப்படுத்தி, காதல், வீரம், சென்டிமென்ட் என கமர்சியலாக ஹிட் அடித்த கில்லி, தளபதியின் கேரியரில் திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். 

குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக விஜய்க்கு ஒரு இமேஜை உருவாக்கியது கில்லி திரைப்படம் தான்.

இதனால் தான் ரீ ரிலீசின் போதும் எந்த ஒரு நடிகரும் நெருங்க முடியாத அளவு வசூலை வாரி குவித்து, தளபதியை தலை நிமிர செய்துள்ளது.  

தளபதியை தன்னுடைய ரோல் மாடல் ஆக்கி, ரீல் லைஃபிலும், ரியல் லைஃபிலும்  சில பல சாதனை செய்ய முற்பட்டு, பஞ்சர் ஆகி இருப்பவர்தான் நம்ம முரட்டு சிங்கிள் விஷால்.

ஏப்ரல் 26 அன்று ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பிசியாக உள்ள விஷால் சைடு பை சைடாக துப்பறிவாளன் 2 படத்தையும்  இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி விஜய்யின் கில்லிக்கு போட்டியாக தான் நடித்த இரும்புத்திரை படத்தை ரீலீஸ் செய்து உள்ளார் விஷால். 

கிட்டதட்ட 70 கோடி வசூலை வாரி குவித்த விஷாலின் இரும்புத்திரை

2018 ஆம் ஆண்டு விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலையும் வாரி குவித்தது. இந்த பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்து உள்ளார் விஷால்.

ஏற்கனவே  2023 தேர்தலில் சைக்கிளில் ஓட்டு போட வந்த விஜய்யை பார்த்து அட்டை காப்பியடித்து, தற்போது நடந்த தேர்தலில் விஷால் சைக்கிளில் ஓட்டு போட வந்தார்.  

விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிய  தீருவேன் என்று கங்கணம் கட்டி  கொண்டுள்ளார்,

இப்படி விஜய்யே கதறும் அளவிற்கு பல தீவிர கொள்கையுடன் வலம் வரும் இந்த வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்