விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மற்றும் ஒரு புதிய சீரியல் களமிறங்க உள்ளது.
தற்பொழுது புதிதாக ஒளிபரப்பத் தயாராகி வரும் சீரியலை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கிவரும் வெற்றி இயக்குனர் சிவசேகர் இயக்கவுள்ளார். இதற்கு ‘வைதேகி காத்திருந்தால்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய சீரியலில் ஏற்கனவே பல நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமான மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற நாயகனும் நாயகியும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்ற இந்த வெற்றி கூட்டணிக்கு மக்களிடம் இருந்து இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சீரியலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போன்று ஒரு குடும்பப் பின்னணி கதைக்களத்தை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் ‘சின்னத்தம்பி’ சீரியல் மூலம் பிரபலமான பிரஜன் பத்மநாபன் கதாநாயகனாகவும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’,’ஆயுத எழுத்து’ சீரியல் மூலம் பிரபலமான சரண்யா கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர்.
இதில் கதாநாயகி சரண்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா அவர்கள் நடிக்க உள்ளார்.
தற்பொழுது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘தென்றல் வந்து என்னைத்தொடும்’ சீரியலுக்கு டப் கொடுக்க வைதேகி காத்திருந்தாள் மற்றும் முத்தழகு போன்ற பல புதிய சீரியல்கள் களமிறங்க காத்துள்ளன.