தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிகராக இடம் பிடிப்பது என்பது கடினமான விஷயம் தான். அந்த வகையில் கமல் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத்.
அவர் பள்ளிப் பருவத்தில் இருக்கும்போது குண்டு பயனாக இருந்தார், பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்தது சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றே கூறலாம்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது சன் டிவியில் பிரபல சீரியல் ஆன மைடியர் பூதம் தொடரில் சிறப்பாக நடித்திருப்பார். இதனால் அவரை மாஸ்டர் பரத் என்று அழைக்கப்பட்டார். இதுவரை கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு சேர்த்து 50க்கும் மேல் படங்களில் நடித்துவிட்டார்.

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பரத் தனது உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

கிட்டத்தட்ட 80 கிலோவிலிருந்து 50 கிலோ எடை குறைத்து விட்டாராம், அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
