அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
விஷால் மற்றும் உதயநிதி இருவருமே சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவ்விழாவில் தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் இவர்கள் பொது வழியில் பேசும்போதும் போடா, வாடா என்று உரிமையாக பேசிக்கொள்வார்கள்.
மேலும் இதில் உதயநிதி பேசுகையில் சீக்கிரம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடியுங்கள். இதற்காக விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருகிறான் என நக்கலாக பேசியிருந்தார். மேலும் ரொம்ப நாளாக விஷாலிடம் கால்ஷீட் கேட்கிறேன். ஆனால் அவர் தர மறுக்கிறார் என உதயநிதி கூறியிருந்தார்.
அதற்கு விஷால் நான் டேட் கொடுத்தால் எங்கள் நட்பு பாழாகிவிடும் என சிரித்தபடி கூறியிருந்தார். அதாவது சமீபகாலமாக விஷால் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இயக்குனர், தயாரிப்பாளர் என பலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஷூட்டிங்குக்கு சரியான நேரத்தில் வருவதில்லை என்றும் சில சமயங்களில் சூட்டிங்கை தவிர்த்து விடுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படத்தை அவரது நண்பர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்திருந்தனர்.
இவர்களுக்கு விஷால் நிறைய கால்ஷீட் பிரச்சனை பண்ணி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவர்கள் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் விஷாலுக்கு தெரியாமலே படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஷாலினால் இவர்களே படாதபாடு பட்ட நிலையில் உதயநிதிக்கு கால்ஷீட் கொடுத்து ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் அவருக்கு அல்வா கொடுத்து வருகிறார் விஷால்.