Connect with us
Cinemapettai

Cinemapettai

trb - seriyal

India | இந்தியா

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம் கட்டி வரும் ஜீ தமிழ்

டிஆர்பி-யில் மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள் போட்டியாக மீண்டும் களத்தில் குதித்த ஜீ தமிழ்.

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் எந்த சீரியல் ஆனது அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது அந்த வர டிஆர்பி ரேட்டிங் தெரிந்துவிடும். அதிலும் விஜய் டிவி சீரியல்களை ஓரம் கட்டும் அளவிற்கு ஜீ தமிழ் சீரியல்கள் மாஸ் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது தற்பொழுது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

இதில் 10-வது இடத்தில் கார்த்திகை தீபம் சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி: இந்த சீரியலில் பிசினஸை விட குடும்பம் தான் முக்கியம் என்று இருக்கும் ஹீரோ. மேலும் தனது திருமணத்தை விட வேலை தான் முக்கியம் என இருக்கும் ஹீரோயின் இவர்களை மையமாக வைத்து இக்கதையானது அமைந்துள்ளது. புத்தம் புது வரவாக வந்திருக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. 

Also Read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

சுந்தரி: இந்த சீரியலில் கணவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் தனது குடும்பத்தின் பார்வையில் இருந்து, மற்றொரு பெண்ணை எவ்வாறு காப்பாற்ற போராடுகிறாள் என்பதை மையமாக வைத்து இக்கதையானது அமைந்துள்ளது. சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் குணசேகரன் எப்படியாவது தனது 40 % சொத்தையும் அப்பத்தாவிடம் இருந்து வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறார். விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலானது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் முடிந்த நிலையில் புது பிரச்சனையானது தொடங்கியுள்ளது. அதிலும் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கீழ்தான் பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்ற முரண்பாடான  கொள்கையில் இந்த சீரியல் ஆனது நகர்ந்து வருகிறது. இனியா சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

வானத்தைப்போல: இந்த சீரியலில் துளசிக்கு எதிரான வெற்றியின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் வெற்றி இடம் சிக்கியுள்ள ராஜபாண்டியை தேடும் பரபரப்பான கட்டத்தில் இந்த சீரியல் ஆனது நகர்ந்து வருகிறது. வானத்தைப்போல சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் கயலுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் பெரியப்பாவே தற்பொழுது தனது மகனின் காதல் விவகாரத்தில் வசமாக சிக்கியுள்ளார். இது ஒரு புறம் இருக்க எப்படியாவது எழில் தனது காதலை கயலிடம் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கயல் சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

Also Read: ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களையும் ஒரே சேனலே ஆக்கிரமித்துள்ளது. அதிலும் சன் டிவியில் புத்தம் புது வரவாக வந்திருக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 6-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜய் டிவியை ஓரம் கட்டும் அளவிற்கு ஜீ தமிழ் சீரியல்கள் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top