Connect with us
Cinemapettai

Cinemapettai

radhika-sun-tv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

ராதிகாவிற்கு சன் டிவி போட்ட ஸ்டிட் கண்டிஷனால் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிரபல சேனல்.

வெள்ளித் திரையில் மட்டுமல்ல சின்னத்திரைகளிலும் பல வெற்றிகளை கண்டவர் ராதிகா சரத்குமார். 24 வருடங்களுக்கு மேலாக ராதிகா சன் டிவி சீரியல்களில் நடித்து முதன்மையானவராக திகழ்ந்து வந்தார். இவர் சன் டிவியின் சித்தி, வாணி ராணி, செல்லமே போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார்.

அதன் பிறகு சமீபத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவி இல்லையென்றால் ராதிகா இந்த அளவிற்கு டிவி சீரியலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆனால் 24 வருட சன் டிவி உறவை  தூக்கி எறிந்து விட்டு, இப்போது விஜய் டிவிக்கு வந்ததன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Also Read: ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

தற்பொழுது ராதிகா விஜய் டிவியில் சீரியல் தயாரிக்கப் போவதாகவும் அதில் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் நடிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன. இவர்கள் மட்டுமல்ல இந்த சீரியலில் மேலும்  இரண்டு சீரியல் கதாநாயகிகள் இணைந்து இருக்கின்றனர்.

கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் சமீபத்தில் ஜீ தமிழில் நிறைவடைந்த பூவே பூச்சூடவா என்று சீரியலின் கதாநாயகி ரேஷ்மா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலின் ஹீரோயின் அஸ்வினி இருவரும் இணைந்துள்ளனர்.

Also Read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

தற்போது ராதிகா சன் டிவிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதற்கு காரணம் ராதிகா அரசியல் சம்பந்தமான சில விஷயங்கள் ஈடுபட வேண்டாம் என்று சன் டிவி கூறியதாகவும், அதைக் கேட்க முடியாது என ராதிகா கூறியதால், இனிமேல் சன் டிவியில் நாடகம் தயாரிக்க முடியாது என உத்தரவு வந்துள்ளது.

நீங்கள் இல்லை என்றால் என்ன என்று வீம்புக்காக விஜய் டிவியிடம் போயிருக்கிறார் ராதிகா. இதனால் சன் டிவிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை ராதிகாவுக்கு மட்டுமே பாதிப்பு. அகம்பாவமும் வீம்பும் புடிச்ச ராதிகா, இத்தனை நாள் வளர்த்த தொலைக்காட்சியை தூக்கி எறிந்து விட்டார் என பல பேர் பேசி வருகின்றனர்.

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

Continue Reading
To Top