15 வருடம் போராடி சமுத்திரக்கனி சேர்த்த சொத்து மதிப்பு.. ஏழரை மூக்கன் நடித்து வெளிவந்த தரமான 6 படங்கள்

Samuthirakani: இயக்குனராக அறிமுகமாகி நாடோடிகள் மற்றும் நிமிர்ந்து நில் போன்ற படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர்தான் சமுத்திரகனி. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் ஆர்வம் செலுத்தி கிடைத்த குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இவர் இன்று 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய கதாபாத்திரம் பெயர் சொல்லும் அளவிற்கு இவருடைய கேரக்டர் நின்னு பேசும்.

இவர் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல போராட்டத்தை சந்தித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு 38 வயதில் தான் அங்கீகாரமே கிடைத்திருக்கிறது. அந்த வகையில் மொத்தமாக 15 வருடம் போராடிய நிலையில் 25 கோடி சொத்து மதிப்பை சேர்த்து வைத்திருக்கிறார். அத்துடன் ஸ்கார்பியோ, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.

தொடர் வாய்ப்பை பெற்று வரும் சமுத்திரக்கனி

இப்படி இவரைப் பற்றி எக்கச்சக்கமான பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான மனிதர். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்கும் ஒரு சாமானிய குரல்களை எழுப்பும் வகையில் பல படங்களில் கருத்துக்களை வைத்திருக்கிறார். அப்பா என்கிற படத்தில் குழந்தைகளின் மனநிலை பற்றி அழகாக பதிவு செய்திருப்பார்.

இப்படி இவர் நடிப்பில் மறக்க முடியாத படமாக சம்பவத்தை ஏற்படுத்தியது சுப்பிரமணியபுரம், சாட்டை, அப்பா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை, விசாரணை, வினோதைய சித்தம், ரைட்டர் போன்ற படங்களில் இவர் பெயர் சொல்லும் அளவிற்கு தனித்துவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இவர் நடித்த விசாரணை படத்தில் இவருடைய இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மேலும் ரஜினி முருகன் படத்தில் ஏழரை மூக்கனாக இவருடைய நெகட்டிவ் கேரக்டரையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவருடைய நடிப்புத் திறமையை பாராட்டி தற்போது நாலா பக்கமும் வளர்ந்து கொண்டு வருகிறார். தற்போது இந்தியன் 2 மற்றும் ரத்தினம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை என்னவென்றால் “நல்ல மனிதர்கள் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள் மனிதர்களை நம்புங்கள் என்றும் தோற்க மாட்டீர்கள்”. இப்படிப்பட்ட இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்