இந்தியன் 2 சேனாதிபதி தாத்தாவே ஜூன் மாதத்தில் பார்க்கலாம்..ரிலீஸ் க்கு முன் நாசுக்கா காய் நகர்த்தும் கமல்

Kamal Indian 2: 90ஸ் காலத்தில் இந்தியன் படத்தை பார்த்து உண்மையிலேயே இவர் தவறு செய்தவர்களை தண்டிக்கும் தாத்தாவாக ஒவ்வொருவரையும் வெளுத்து வாங்குகிறார் என்று எண்ணிய நாட்கள் உண்டு. ஆனால் அது வெறும் சினிமாவாக இருந்தாலும் இப்படி ஒரு தாத்தா நிஜத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை.

ஏனென்றால் அந்த அளவிற்கு நாலாபாக்கமும் லஞ்சம், ஊழல், தவறுகள் என்று அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது அதே கருத்தை 28 வருடங்களுக்குப் பின் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கொண்டு வருகிறார். அதாவது சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது.

சம்பவம் செய்ய தயாரான இந்தியன் தாத்தா

இன்னும் இதற்கான ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று ஜூன் மாதத்தில் வெளிவரும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். ஆனால் எந்த தேதி என்று மட்டும் இன்னும் கமுக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தேதி அறிவிப்பதற்கு முன் கமலை வைத்து ஒரு சம்பவத்தை செய்துவிடலாம் என்று மொத்த டீமும் தயாராகி விட்டார்கள். அதாவது எப்படி என்றால் ஒரு பாட்டில் லிரிக் வீடியோவை வைத்து வெளியிடப் போகிறார்கள். அந்தப் பாட்டின் வரிகள் என்னவென்றால் “வராரு தாத்தா வராரு, இந்தியன் தாத்தா வராரு, அநியாயத்தை அதட்டி கேட்க தாத்தா வராரு, இந்தியன் தாத்தா வராரு”

இந்த ஒரு பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ரொம்பவே நன்றாக அமைந்திருக்கிறதாம். அந்த வகையில் இந்த பாடலை ஃபர்ஸ்ட் சிங்களாக வெளியிடப் போகிறார்கள். இப்ப வருகிற படங்களில் பொதுவாக படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன் ஒரு பாடலை வெளியிட்டு அந்தப் படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்து விடுவது வழக்கம்தான்.

அது போலவே இந்தியன் 2 படத்தில் கமலை வைத்து வெற்றிக்கு நாசுக்காக காய் நகர்த்த பிளான் பண்ணி விட்டார்கள். எது எப்படியோ பல வருட உழைப்பையும் கஷ்டத்தையும் வீணடிக்காமல் உறுதியாக இருந்து கரை சேர்க்க நேரம் வந்துவிட்டது. அந்த வகையில் அனைவரும் இப்படத்தை வருகிற ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் பார்ப்பதற்கு தயாராக இருப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்