ஆண்டவர் காட்டுல மழை தான்.. கல்கி படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Actor Kamal: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார்.

அதில் இந்தியன் 2 விரைவில் வெளியாகியுள்ள நிலையில் தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கல்கி படத்தில் ஆண்டவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளிவந்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தில் கமலும் இணைந்துள்ளார். அவர் இதில் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது.

கமலின் சம்பளம்

ஆனால் பின்னர் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது 15 நிமிடங்கள் மட்டுமே அவருடைய காட்சிகள் வரும் என்று கூறப்படுகிறது.

இதற்காக கமல் வாங்கிய சம்பளத்தை கேட்டால் தலை சுற்றிவிடும். அதன் படி வெறும் 15 நிமிடங்களுக்கு 20 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படி பார்த்தால் ஆண்டவர் காட்டில் பண மழை தான். ஏற்கனவே இந்தியன் 2 படத்துக்காக இவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் கல்கியும் தன் பங்குக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் ஆண்டவர் அடுத்தடுத்த படங்களின் மூலம் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்