அக்னி வருவதற்கு முன் கடும் மண்ட சூடு பிடித்துத் திரியும் விஷால்.. தளபதியால் புரட்சித்தளபதிக்கு வந்த ஆபத்து

Vishal: தன்னை சுற்றி சர்ச்சை வரும் அளவிற்கு வேடிக்கை காட்டி வந்த விஷால் கடந்த சில வருடங்களாகவே வெற்றி படத்தை கொடுக்க தவற விட்டுவிட்டார். ஆரம்பத்தில் காதல் மற்றும் ஆக்சன் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கேரியரில் இவருக்கு என்று ஒரு முத்திரையை பதித்தார்.

ஆனால் போகப் போக வேடிக்கை காட்டும் ஜோக்கர் ஆகவே மாறிவிட்டார். இருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ஓரளவுக்கு இவருக்கு கை கொடுத்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஆக்சன் கலந்த கலவையாக ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.

முதல் நாளே தத்தளித்து வரும் விஷாலின் ரத்னம்

எப்படியாவது இந்த படத்தின் மூலம் இழந்த பெயரை எடுத்து விட வேண்டும் என்று போராடிய விஷாலுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இன்று அமைந்து விட்டது. அதாவது 20 வருடங்களுக்கு முன் வெளிவந்த கில்லி படம் கடந்த ஒரு வாரமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் அளவில் லாபத்தை பார்த்து வருகிறது.

இதனால் பெரிய பெரிய தியேட்டர்களில் கில்லி படம் தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. எங்கே திரும்பினாலும் ஹவுஸ்புல் என்ற போர்டு மட்டும் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு வெற்றி நடை போட்டு கில்லி படம் தூள் கிளப்புகிறது. இதனால் விஷாலின் ரத்னம் படத்திற்கு பெரிய தியேட்டர்களில் இடம் கிடைக்கவில்லை.

எங்கேயாவது மூலை முடுக்கில் இருக்கும் சின்ன தியேட்டர்களில் மட்டும் ஓடிக்கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய தியேட்டர்களிலும் கில்லி படம் தான் ஓடுகிறது. இதனால் வசூல் அளவிலும் விமர்சன ரீதியாகவும் பெரிய அவமானத்தை சந்தித்து வருகிறார் விஷால்.

அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்னே மண்டைக்குள் சூடு பிடித்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் சுற்றித் திரிகிறார். விஜய்யோட பெரிய ரசிகன் என்று காலரை தூக்கிக் கொண்டு திரிந்த விஷால் மறைமுகமாக தளபதியால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியே போனால் இன்னும் ஒரு சில தினங்களில் ரத்னம் படம் இருக்கும் இடம் தெரியாமல் தூக்கி விடுவார்கள் போல. old is gold என்று சொல்வது போல் விஜய்யின் கில்லி படத்திற்கு போட்டியாக இப்ப வந்திருக்கும் விஷாலின் ரத்னம் தோல்வியடைந்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்