விஜய் கமல் படத்தை தோண்டி தூசி தட்டிய கில்லி தயாரிப்பாளர்.. லைக்கா காட்டில் கொட்டப்போகும் பேய் மழை

Vijay Kamal Movies Ready to re- release: இப்ப இருக்கிற படங்கள் வன்மத்தையும் கொடூரத்தையும் காட்டும் விதமாக தொடர்ந்து ஆக்ஷன் படமாக தான் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால் அழுத்துப்போன மக்களுக்கு ஒரு தெம்பூட்டும் விதமாக பொக்கிஷமாக இருந்த பழைய படங்களை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறார்கள்.

தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே மாறி தலை தூக்கி வருகிறது. அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அல்லது ரிலீஸ் செய்யப்பட்ட அந்த நாளை கொண்டாடும் விதமாக சில படங்களை மறுபடியும் ரீலீஸ் செய்து வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் 20 வருடங்களை தாண்டிய நிலையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் தான் கில்லி. பொதுவாக ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ரிலீஸ் செய்வார்கள். ஆனால் கில்லி படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் அதிகரித்ததால் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்று வரை ஹவுஸ் புல் ஆகி திரையரங்குகளில் மக்கள் நிரம்பி வழிகிறார்கள்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் பிளான்

அந்த வகையில் கில்லி கிட்டத்தட்ட 10 கோடி வசூலை அடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மறுபடியும் விஜய் படத்தையும் கமல் படத்தையும் தூசி தட்டி ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் பிளான் பண்ணி விட்டார். விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி மற்றும் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படமும் ரீ ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது.

இதில் குஷி படம் மே மாதத்தில் 19ஆம் தேதி ரீ ரிலீஸ் பண்ணப் போகிறார்கள். ஏனென்றால் இந்த நாள் வந்துவிட்டால் கிட்டத்தட்ட 24 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் இந்தியன் படம் வருகிற மே 30ஆம் தேதி ரீ ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயம் லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்திருக்கிறது. காரணம் மே மாதத்தில் இந்தியன் படம் ரிலீஸ் ஆகிவிட்டால் அதனுடைய தாக்கம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்து விடும்.

இதுதான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கிறது என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்தியன் முதல் பாகத்தை வைத்து இரண்டாம் பாகத்தில் லைக்கா நிறுவனத்திற்கு வியாபார ரீதியாக பணமழை கொட்ட போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்