ஓவர் டிராமாவை போட்டு பாண்டியன் குடும்பத்தை கவுக்க போகும் தங்கமயிலு.. உஷாரான மீனா, குதூகலமான மச்சான்கள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜியின் குடும்பம் வன்மத்தை கொட்டும் விதமாக பாண்டியனின் மகன்கள் மூன்று பேர் மீதும் புகார் கொடுத்து அரெஸ்ட் பண்ண வைத்து விட்டார்கள். இதனை தெரிந்து கொண்ட பாண்டியன் எப்படியாவது மகன்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார்.

அதற்கு வக்கீல் ராஜி மனசு வைத்தால் ஈசியாக இந்த காரியத்தை முடித்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அதாவது ராஜி, என்னுடைய அண்ணன் குமரவேலு தான் முதலில் என்னை அடித்து சித்திரவதை பண்ணினார் என்று புகார் கொடுக்க வேண்டும். இதனை கேள்விப்பட்ட அவர்கள் குமரவேலு ஜெயிலுக்கு போகக்கூடாது என்ற நினைப்பில் கொடுத்த கேசை அவர்களே வாபஸ் வாங்கி விடுவார்கள் என்று சொல்கிறார்.

அதன்படி ராஜியும் எந்தவித யோசனையும் பண்ணாமல் அண்ணன் மீது புகார் கொடுத்து விட்டார். இதனை தெரிந்து கொண்ட ராஜியின் அப்பா, சித்தப்பா, அண்ணன் பதறிப் போய் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்து கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விட்டார்கள். இதற்கிடையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தங்க மயிலின் குடும்பம் நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஓவர் டிராமாவை போட்டு விட்டார்கள்.

ஆமை மாதிரி போக போகும் தங்கமயில்

முக்கியமாக மாமா மாமா என்று உருகி உருகி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார் தங்கமயில். போதாதற்கு தங்கமயில் அப்பா எனக்கு அவர தெரியும் இவர தெரியும் என்று பீலா விட்டார். கடைசியில் இவர்களால் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை. இது சும்மா ஒரு வெத்துவேட்டு குடும்பம் என்று தெரியாத பாண்டியன் இவர்களின் பாசத்தை பார்த்து ரொம்பவே பூரித்து போய்விட்டார்.

இதனைத் தொடர்ந்து மகன்களை கூட்டிட்டு வீட்டிற்கு வந்த பாண்டியன் எதுவும் சொல்லாமல் அனுப்பிவிட்டார். அதன் பிறகு கோமதியிடம் மகன்களையும் சம்மந்தி விட்டார்களையும் பற்றி பெருமையாக பேசி சந்தோஷப்பட்டு கொண்டார். ஆனால் ஆரம்பத்தில் இருந்து மீனாக்கு மட்டும் தங்க மயிலின் குடும்பத்தின் மீது சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.

அதே மாதிரி இன்று அவர்கள் பண்ணிய ஆர்ப்பாட்டத்தை நினைத்து மீனாவுக்கு மிகப்பெரிய சந்தேகம் வந்துவிட்டது. இதனால் அந்த குடும்பத்தில் இருந்து எப்படியாவது நம்ம குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று உஷாராகி விட்டார். ஆனாலும் பாண்டியன், தங்கமயில் குடும்பத்தை கண்மூடித்தனமாக நம்புவதால் கல்யாணம் நடந்துவிடும்.

பிறகு தங்க மயிலு குடும்பத்திற்குள் நுழைந்த பிறகு பண்ணுகிற ஒவ்வொரு கலகத்திற்கு பின்னாடியும் பிரச்சனை எழும்ப போகிறது. இதனை பாண்டியனின் மச்சான்கள் குதூகலமாக பார்த்து சந்தோஷப்பட போகிறார்கள். ஆனால் ராஜி, மீனா, செந்தில் மற்றும் கதிர் இருக்கும் வரை இந்த குடும்பத்தை யாராலயும் பிரிக்க முடியாது.

- Advertisement -spot_img

Trending News