Indian 2: ஜூன் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கிய இந்தியன் 2.. சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் சுள்ளான்

Indian 2 release date: பார்த்துப் பார்த்து கண்ணும் பூத்து போச்சு, கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு. இப்போ எல்லாம் இந்தியன் 2 படத்தைப் பற்றி செய்தி ஏதாவது வந்தால், இன்னுமா இந்த படத்தை பத்தி பேசிகிட்டு இருக்காங்கன்னு தான் தோணுது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2024 வந்தும் இந்த படத்துக்கு ஒரு நல்ல நேரம் அமையவில்லை. தீபாவளிக்கு வருது, ஆயுத பூஜைக்கு வருது, சுதந்திர தினத்துக்கு வருது, குடியரசு தினத்துக்கு வருதுன்னு அப்பப்போ அப்டேட் மட்டும் வந்து கொண்டு தான் இருந்தது.

எல்லா விழாக்களும் வந்ததே தவிர இந்தியன் தாத்தா தான் வரவில்லை. ஒரே கட்டமாக ஜூன் 13ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும்னு சொல்லி இருந்தாங்க. இப்ப அதுவும் புஸ்ஸுன்னு போயிடுச்சு. ஒரு சில விஷயத்தை ஆர போட்டால் தான் நல்லா இருக்கும்.

ஒரு சில விஷயத்தை சுட சுட செஞ்சா தான் நல்லா இருக்கும். அப்படி அப்டேட் கொடுத்து அதே சூட்டில் ரிலீஸ் செய்து இருக்க வேண்டிய படம் தான் இந்தியன் 2. ரிலீஸ் தேதி தள்ளி தள்ளி போவதால் இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே நீர்த்து போய்விட்டது.

இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகாததற்கு ஒரு காரணம் பாட்டு ஒன்னு எடுத்து முடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த பாடல் காட்சியை எடுப்பதற்கு கமல் கண்டிப்பாக வேண்டுமாம். ஆனால் அவர் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்து விட்டார்.

சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் சுள்ளான்

தேர்தல் முடிந்த கையோடு, கொடுத்த கால் சீட்டுக்கு பொறுப்பாக மணிரத்தினம் படத்தில் நடிக்கப் போய்விட்டார். இப்ப அதை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியன் 2 பாடல் காட்சிக்கு அவரால் வர முடியாது. இதனால் இந்த பாடல் காட்சி இப்போதைக்கு எடுக்க வாய்ப்பில்லை.

மொத்தத்தில் ஜூன் மாத ரேசிலிருந்து இந்தியன் தாத்தா விலகிக் கொண்டார். அந்த மாதத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி கொடுக்கப் போவது நடிகர் தனுஷ் தான். தனுஷ் இயக்கி நடித்து உருவாகி இருக்கும் படம் தான் ராயன்.

ஏற்கனவே இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லி இருந்தார்கள். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இப்போது ஜூன் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் பட குழுவினர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்