Vijayakanth : விஜயகாந்துக்கு உதவிய வெள்ளிவிழா நடிகர்.. எதிரெதிர் துருவங்கள் ஆக்கிய சந்தர்ப்பம்

விஜயகாந்த் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தார். அவருக்கு வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. அதுவும் பிரபல நடிகரால் வாய்ப்பு பெற்ற விஜயகாந்த் அதன் பின்பு அவருக்கு நேர் எதிராக மாறும் சந்தர்ப்பமும் ஏற்பட்டு இருந்தது.

அதாவது வேலூரில் குமரேசன் என்பவர் கணேஷ் என்ற திரையரங்கில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்த்துள்ளார். அப்போது அந்த திரையரங்கு ஓனருக்கும் இயக்குனர் நாராயணசாமிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் குமரேசனை நாராயணன் இடம் வேலைக்கு அனுப்பியிருந்தார்.

அப்போது நாராயணன் தனது ஆபிஸ் பாயாக குமரேசனை வைத்திருந்தார். அந்த சமயத்தில் தான் விஜயராஜ் என்பவர் மதுரையில் இருந்து வாய்ப்பு கேட்டு நாராயணனை அணுகினார்.

குமரேசனும் மதுரைக்காரர் என்பதால் விஜயராஜை பார்த்தவுடன் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகிவிட்டது. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி குமரேசன் நாராயணன் இடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவரால் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை.

விஜயகாந்த்க்கு வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

ஆனால் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் விஜயராஜ் ஹீரோவாக வைத்து நாராயணன் படம் எடுக்க அதில் உதவி இயக்குனராக குமரேசன் வேலை பார்த்தார். அந்தப் படம் தான் சிவந்த கண்கள். அதில் விஜயராஜ் ஆக நடித்தவர் விஜயகாந்த். மேலும் குமரேசனாக வேலை பார்த்தவர் ராமராஜன்.

இருவரும் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வந்தாலும் அதன் பிறகு இரு துருவங்களாக மாறிவிட்டனர். அதாவது அதன் பிறகு ராமராஜன் நடிகராக வலம் வந்த நிலையில் அவருடைய எங்க ஊரு பாட்டுக்காரன் படமும் விஜயகாந்தின் வீரபாண்டியன் படமும் ஒரே நாளில் வெளியானது.

அதன் பிறகு விஜயகாந்தின் திருமணம் கலைஞர் கருணாநிதி ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது. விஜய்காந்தின் தங்கை போல உள்ளவர் தான் நடிகை நளினி. ராமராஜன் நளினியை எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். மேலும் விஜயகாந்த் திமுகவில் இருந்த போதும் ராமராஜ் அதிமுகவில் இருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்