பாக்க தான் கரடு முரடான வில்லன், நிஜத்துல இப்படி ஒரு திறமையா.. எதிர்நீச்சல் குணசேகரனின் இன்னொரு முகம்

Ethirneechal Vela Ramamoorthy: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இப்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆதி குணசேகரன் ஆக நடித்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பின் சீரியலின் போக்கும் மாறி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் வேல ராமமூர்த்தியின் என்ட்ரி தான். இப்போது வரை ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து தான் போகிறார்கள்.

அந்த அளவுக்கு சீரியலில் வில்லத்தனம் கொடி கட்டி பறக்கிறது. இவ்வாறு கரடு முரடாக இருக்கும் வேலராமமூர்த்தி நிஜத்தில் ஒரு திறமையான எழுத்தாளர்.

வேல ராமமூர்த்தியின் மறுபக்கம்

இதுதான் இவருடைய மிகப்பெரிய அடையாளம். மண்மணம் சார்ந்த தன்னுடைய எழுத்துக்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை இவர் பெற்றுள்ளார்.

அதேபோல் நாவல்கள், சிறுகதைகள் என எழுத்தாளராகவும் இயங்கி வருகிறார். அந்த வகையில் குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை, அரியநாச்சி போன்றவை இவர் எழுதிய நாவல்கள் ஆகும்.

மேலும் இவருடைய சிறுகதைகள் தொகுப்பும் வெகு பிரபலம். இப்படி திறமையான எழுத்தாளராக இருக்கும் இவரை பார்த்து ரஜினியே ஆச்சரியப்பட்டு போனாராம்.

இப்படி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பிடித்த இவர் ஆதி குணசேகரன் ஆகவும் மிரட்டி வருகிறார். ஆனால் நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

அப்படி இருந்தால் மாரிமுத்துவை காப்பியடித்தது போல் இருக்கும். அதனாலேயே வேலராமமூர்த்தி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்