Thalapathy: உங்கள நம்பி 250 கோடி சம்பளத்தை விட்டு வந்தேன் பாரு! சட்ட சிக்கலில் மாட்டிய தளபதியின் விழுதுகள்

Thalapathy Vijay: முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். இப்படித்தான் இப்போது விஜய் ஆரம்பித்திருக்கும் கட்சியின் நிலைமை இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருடைய கட்சி நிர்வாகிகள் செய்யும் தவறுகள் பெரிய அளவில் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

அரசியலைப் பொறுத்த வரைக்கும் யார் எப்ப சிக்குவார் என்று கன்னி வெடி வைத்து தான் காத்திருப்பார்கள். ஒரு சில நிர்வாகிகள் செய்யும் தவறால் கட்சி அழிந்து போன கதை எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அசைக்க முடியாத கொம்பனாக இருந்த திமுக கட்சி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு பிறகு பத்து வருஷம் தமிழ்நாட்டுல எங்க இருந்துச்சுன்னு தெரியாத நிலைமையில் ஆயிருக்கு.

அப்படி இருக்கும்போது விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் அரசியலின் கடைக்குட்டி என்று சொல்லலாம். ஆரம்பத்திலேயே ஒரு சில கலைகள் பிடுங்கி எடுக்கப்படவில்லை என்றால் அது மரத்தை வேரோடு கூட சாய்த்து விடும். அப்படித்தான் கட்சி நிர்வாகிகள் செய்யும் தவறும்.

சட்ட சிக்கலில் மாட்டிய தளபதியின் விழுதுகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் தான் விஜய் முருகன். இவர் நடிகர் விஜய்யின் நற்பணி மன்றத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் ஆரம்பித்து இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் ஆரணி தொகுதி தலைவராக இருக்கிறார்.

அதே பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் இரண்டு லட்ச ரூபாய் சீட்டு முதல் 50 ஆயிரம் சீட்டு வரை போட்டிருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆறிலிருந்து 10 லட்சம் வரைக்கும் கூட இவரிடம் சீட்டு கட்டி இருக்கிறார்கள்.

இவருடைய மனைவி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார் விஜய் முருகன். எப்ப வீட்டுக்கு வந்தாலும் சரியான பதில் எதுவும் சொல்லாமலேயே காலத்தையும் நேரத்தையும் கடத்திக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன பெண்கள் இன்று விஜய் முருகனை வீட்டிற்குள் வைத்தே வெளியில் ஆறு பூட்டுகளை போட்டு பூட்டி விட்டார்கள். விஜய் முருகன் எவ்வளவோ கூச்சலிட்டும் அவர்கள் அந்த கதவை திறப்பதாய் இல்லை.

இந்த வழக்கும் ஆரணி காவல்துறைக்கு சென்று விட்டது. இவர் செய்த தனிப்பட்ட தவறு இப்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்ற பெயரில் மீடியாவில் வெளியாகி வருகிறது. தன்னுடைய ரசிகர்களை மட்டுமே கடவுளாக நம்பி விஜய் இந்த சமூக சேவையில் களம் இறங்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு தோள் கொடுத்து நிற்காமல் இப்படி காசுக்காக அவருடைய பெயரை கெடுப்பது ரொம்பவும் தவறான விஷயம். இவர்களை எல்லாம் நம்பி 250 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு விஜய் களம் காண இருப்பது சற்று பதட்டத்தை தான் கொடுக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்