திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

எதிர்நீச்சல்: சூடு பிடிக்காத கதை, ஜீவானந்தம் வைக்கும் அதிரடி டிவிஸ்ட் .. மொத்தமா மாறப்போகும் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்: சன் டிவி சேனலின் டிஆர்பிஐ தூக்கி நிறுத்திய மொத்த பெருமையும் எதிர்நீச்சல் சீரியலுக்கு உண்டு. மெட்டிஒலி, கோலங்கள், நாதஸ்வரம் போன்ற சீரியல்களின் மூலம் கோடி கட்டி பறந்து கொண்டிருந்தது சன் டிவி. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விஜய் டிவியின் சீரியல்கள் சன் டிவியை டம்மி ஆகிவிட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என மக்கள் விஜய் டிவி சீரியல்களை விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. எதிர்நீச்சல் என்னும் சீரியலின் மூலம் மீண்டும் கம்பக் கொடுத்தார் கோலங்கள் சீரியல் இயக்குனர் திருச்செல்வம்.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் இருக்கும் நான்கு மருமகள் அவர்களுடைய முன்னேற்றத்திற்காக எப்படி பாடுபடுகிறார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை. இந்த சீரியல் ஆரம்பத்தில் ஓஹோ என்று கலை கட்டியதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து தான்.

மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் டல்லடிக்க தொடங்கி விட்டது. அப்பத்தாவின் மரணம், தர்ஷினியின் திருமணம் என என்னென்னவோ கதைகள் மாற்றப்படும் நாடகத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஜனனி சீரியலின் ஹீரோயினாக இருந்தாலும் அவரை தவிர மற்றவர்கள் எல்லோரும் சிறப்பாக நடிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அம்மா மீனாட்சி என கையெடுத்து கும்பிட்ட மாரிமுத்து கேரக்டரின் வேலராமமூர்த்தி இன்று வரை மக்களால் பார்க்க முடியவில்லை.

எந்த ஒரு பிரச்சனையும் முடிவுக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டு இருப்பது தான் இந்த நாடகம் டவுன் ஆனதற்கு முக்கிய காரணம். ஒரு வழியாக தர்ஷினியின் திருமணத்தை மருமகள்கள் நிறுத்துவது போல் பாசிட்டிவாக காட்டப்பட்டது.

இருந்தாலும் மக்களுக்கு இந்த நாடகத்தின் மீது திருப்தி ஏற்படவில்லை. ஆனால் வாரத்திற்கு வாரம் இரண்டு மூன்று கேரக்டர்கள் தான் நாடகத்தில் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த நாடகத்தில் புதிதாக சேர்ந்திருப்பவர் தான் நடிகை மற்றும் இயக்குனர் கொற்றவை.

தர்ஷினியின் திருமணத்தை நிறுத்துவதற்கு உதவுவது போல் இந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஈஸ்வரி ஆதிகுலசேகரனை விவாகரத்து செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார். ஒருவேளை இந்த விவாகரத்து கேசை எடுத்து நடத்தும் வக்கீலாக கொற்றவை நடிப்பதற்கு அதிகவே வாய்ப்பு இருக்கிறது.

இதனால் திருச்செல்வம் இந்த கதையின் போக்கை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி குணசேகரனுக்கு எதிராக வலுவான ஒரு வில்லன் கேரக்டர் இல்லாததுதான் இந்த நாடகத்தின் சுவாரஸ்யம் குறைந்ததற்கு காரணம்.

எல்லா சிக்கலிலும் ஆதி குணசேகரன் ஜெய்ப்பது போல் காட்டுவது தான் மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. உண்மையை சொல்ல போனால் மாரிமுத்து ஆதி குணசேகரனாக நடித்த வரை தான் எதிர்நீச்சல் மவுசு மக்களிடையே அதிகமாக இருந்தது. நாடகத்தின் கதையை எவ்வளவு மாற்றினாலும் அந்த ஒரு கேரக்டர் இல்லாதது இந்த நாடகத்திற்கு பெரிய இழப்புதான்.

- Advertisement -spot_img

Trending News