Vijay: ஏ ஆர்முருகதாஸ் கேரியரை கேள்விக்குறியாக்கிய படம்.. பல் பிடித்து பார்த்த விஜய், சன் பிக்சர்ஸ்

Murugadoss-Vijay
Murugadoss-Vijay

கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என விஜய் செகண்ட் இன்னிங்சை வலுவாக மாற்றியவர் ஏ ஆர் முருகதாஸ். அப்பேர்ப்பட்ட முருகதாஸிற்கு இன்று விஜய் படம் கொடுக்க மறுத்து வருகிறார். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவருக்கு இன்று இப்படி ஒரு நிலைமை வந்துள்ளது.

தற்போது அவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்று கூறலாம். சிவகார்த்திகேயனை வைத்து அமரன், அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கான் உடன் ஒரு படம், மீண்டும் தமிழில் சத்யஜோதி தயாரிப்பாளருக்கு ஒரு படம் என வரிசையாக படங்கள் வைத்திருக்கிறார்.

பல்பிடித்து பார்த்த விஜய், சன் பிக்சர்ஸ்

விஜய்க்கு மட்டும் இல்லை அஜித்துக்கும் கூட தீனா என்னும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார். அஜித்துக்கு “தல” என்று பெயர் வர காரணமாக இருந்தது தீனா படம் தான. இன்று அஜித்தும் கூட அவருக்கு படம் கொடுக்க மறுத்து வருகிறார்.

சர்க்கார் படத்திற்கு அப்புறம் விஜய்யுடன் இவர் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் அந்த கதையை இரண்டு முறை கேட்டுவிட்டு விஜய் அதை மாற்றுங்கள், இதை மாற்றுங்கள் என அலைக்கழித்துள்ளார். இது முருகதாஸுக்கு பெரும் சங்கடமாக மாறிவிட்டது.

விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினியை வைத்து முருகதாஸ் எடுத்த படம் தர்பார், அது சரியாக போகவில்லை என்று சன் பிக்சர்ஸ் அவருக்கு சம்பளம் குறைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த முருகதாஸ் அப்படியே அந்தப் படத்தை கைவிட்டு விட்டார்.

Advertisement Amazon Prime Banner