Ajithkumar: இவ்வளவு திறமையான பொண்ணா ஷாமிலி.. இன்ஸ்ட்டா பதிவால் ஹார்ட் அட்டாக் வர வைச்ச அஜித் மச்சினிச்சி

shamili
shamili

Ajithkumar: தமிழ் சினிமாவில் அக்கா தங்கச்சிகளாக உள்ளே வந்து கொடி கட்டி பறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருந்தவர்கள் தான் நடிகைகள் ஷாலினி மற்றும் ஷாமிலி. குழந்தை நட்சத்திரங்களாக இரண்டு பேரும் போட்டி போட்டு தென்னிந்திய சினிமாவின் படங்களில் நடித்திருக்கிறார்கள்.

சின்ன வயதிலேயே இரண்டு பேருமே படு சுட்டியாக நடிக்க கூடியவர்கள். ராஜா சின்ன ரோஜா என்னும் படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார் பேபி ஷாலினி. அதேபோன்று பேபி ஷாமிலியும் நடிப்பில் பயங்கரமான கெட்டிக்காரி.

மூன்று வயது இருக்கும் போது மணிரத்தினம் இயக்கத்தில் அஞ்சலி படத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். வெள்ளை கலர் கவுன், பம்பை முடி என கியூட்டாக நடித்திருப்பார். இவருடைய நடிப்பிற்கு இன்னும் எடுத்துக்காட்டாக ஒரு படத்தை சொல்ல வேண்டும் என்றால் அது தேவர் வீட்டு பொண்ணு.

ஒவ்வொரு வசனத்தையும் நச்சு நச்சுன்னு பேசியிருப்பார். அக்கா ஷாலினி அடுத்தடுத்து காதலுக்கு மரியாதை, அமர்க்களம் என அஜித் மற்றும் விஜய் கூட ஜோடி போட்டு நடித்தார். தனக்கான வாழ்க்கை சரியாக அமைந்த உடன் அஜித் குமாரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இவ்வளவு திறமையான பொண்ணா ஷாமிலி

ஷாமிலி கொஞ்சம் லேட்டாக தான் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். கொழுப்பு முழுக் என்று இருந்த அந்த சின்ன வயசு பாப்பா திடீரென ஜீரோ பிகரில், நடிகர் விக்ரம் பிரபு உடன் இணைந்து வீர சிவாஜி படத்தில் நடித்திருந்தார். ஷாலினிக்கு கை கொடுத்த அளவுக்கு ஷாமிலிக்கு சினிமா கை கொடுக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி மூலம்தான் முன் எல்லாம் நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தை பார்க்க முடியும். நடிப்பை தாண்டி ஷாமிலிக்கு ஓவியம் வரைவதன் மீது அதிக நாட்டம் இருக்கிறது.

இளங்கோவன் என்பவரிடம் ஓவியம் கற்றுக்கொண்டு நிறைய சித்திரைகளை வரைந்து இருக்கிறார் ஷாமிலி. சமீபத்தில் பெங்களூருவில் இவர் வரைந்த புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அவர் வரைந்த ஓவியத்துடன் போஸ் கொடுத்து ஒரு போட்டோவை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஏற்றி இருக்கிறார்.

அழகான பெண்ணின் உருவத்தை ஆடை இல்லாமல் வரைந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அடடே பேபி ஷாமிலிக்கு இப்படி ஒரு திறமையா என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner