வெற்றிப்படங்கள் கொடுத்தும் காணாமல் போன 6 நடிகர்கள்.. ஒரு காலத்தில் எல்லோரும் சாக்லேட் பாய்ஸ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தலைப்பு, திறமை இருந்தும் சரியான வாய்ப்பு அமையாமல் காணாமல் போன நடிகர்கள் அல்லது இன்னும் முயற்சி செய்து கொண்டு இருக்கும் நடிகர்கள்.

ராம்கி: சின்னப்பூவே மெல்லப்பேசு, பாலைவன பறவைகள், மருது பாண்டி , கருப்பு ரோஜா, செந்தூரப்பூவே, இணைந்த கைகள், ஆத்மா என்று சென்று கொண்டிருந்த ராம்கியின் திரைப்பயணம், 2004 தின் ஆரம்பத்தில் முடிவுக்கே வந்தது. அதன் பிறகு ஆள் என்ன ஆனார், என்ன செய்கிறார் என்று எதுவும் தெரியவில்லை. 10 வருடங்கள் கழித்து மாசாணி, பிரியாணி என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் மீண்டும் வந்தார். தெலுங்கில் ஆர்எக்ஸ்100 என்னும் வெற்றிபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிரோஷாவை காதலித்து திருமணம் முடித்து சுகமாக வாழ்கிறார் என்பது சந்தோசமான விஷயம்

மோகன்: ஒரு காலகட்டத்தில் மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா, மற்றும் அதையும் கடந்து ஓடி பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றன. சிறிய தயாரிப்பாளர்களின் கமலஹாசன் என்று புகழ் பெற்று, பல படங்களில் நடித்தார். பின் வரிசையாகத் தோல்விப் படங்கள். சொந்தப் படங்கள் எடுத்து அவையும் சரியாக ஓடவில்லை. தற்போது இயக்குனர் மோகன் ஜி யுடன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இடையில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த்: தமிழ் சினிமாவில் பிரஷாந்த் அளவுக்கு அருமையான ஆரம்பம் யாருக்கும் கிடைத்திருக்காது. அவர் நடித்த முதல் மூன்று படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. குறுகிய காலத்தில் பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் நடித்தார். என்ன ஆனதோ, யார் கண் பட்டதோ, சினிமாவிலும் வாய்ப்புகள் இழந்தார், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகள். தற்போது மீண்டும் அந்தகன் படம் மூலம் மறுபிரவேம் செய்ய முயல்கிறார்.

ஷாம்: நடிகர் ஷாம் துணை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர். முதல் படமான 12B யிலேயே அப்போதைய முன்னணி நடிகைகளான சிம்ரன், ஜோதிகா வுடன் இணைந்து நடித்தார். அந்த படம் நன்றாக போனது. அதன் பிறகு இயற்கை படத்தை தவிர சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. மிகவும் எதிர்பார்த்த உள்ளம் கேட்குமே, உயிரை கொடுத்து நடித்த 6 மெழுகுவர்த்தி படங்களும் தோல்வி அடைந்தன. தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரசன்னா: திறமையான நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரசன்னா. இவர் நடித்த அழகிய தீயே, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் நன்றாகவே போனது. அதன் பிறகு இவருக்கு என்று பெரிதாக எந்தவொரு வெற்றியும் அமையவில்லை. அதனால் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் கூட நடித்தார். தற்போது வெப் சீரிசில் நடிக்க தொடங்கி இருக்கிறார். சொந்த வாழ்க்கையில் சினேகாவுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

விமல்: சிறு சிறு ரோல்களில் நடித்து, பசங்க படம் மூலமாக அறிமுகமான விமல், களவாணி படத்தில் நன்றாகவே நடித்திருந்தார். கிராமத்து கதைக்கு என்றே செட்டான முகமாகவும், குரலாகவும் அவர் மிகப்பிரபலம். தேசிங்கு ராஜா படம் தவிர்த்து இவர நடித்த எந்த சமீபத்திய படமும் வெற்றி பெறவில்லை. அதனால் இவரும் வெப் சீரிஸில் நடித்தார். குடிப்பழக்கம் உள்ளவர் அதனால் வாய்ப்புகள் பலவற்றை தவற விடுகிறார் என்றும் இவர் மீது குற்றாசாட்டு உண்டு.

Next Story

- Advertisement -