நாளை ரிலீசுக்கு விஷாலுடன் மோத காத்திருக்கும் 4 படங்கள்.. ரத்னத்தை மலை போல் நம்பி இருக்கும் அனகோண்டா!

hari priya vishal
hari priya vishal

Vishal : கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றதால் எதிர்பார்த்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நாளை ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை முன்னிட்டு கிட்டத்தட்ட நான்கு படங்கள் தியேட்டரில் வெளியாகிறது.

ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் ரத்னம் படம் உருவாகி இருக்கிறது. பக்கா ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது.

ரத்னம் படத்திற்கான ப்ரமோசனையும் படக்குழு தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷால் பெரிதும் நம்பி உள்ள நிலையில் அப்படத்திற்கு போட்டியாக மூன்று படங்கள் வெளியாகிறது.

ரத்னம் படத்திற்கு போட்டியாக வெளியாகும் ஒரு நொடி

அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர், கரு பழனியப்பன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ஒரு நொடி படம். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

ஆகையால் நடிகர் விஷாலின் ரத்னம் படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு நொடி படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதில் மேல் பூனையாக தான் விஷால் இருந்து வருகிறார். அடுத்ததாக சிறிய பட்ஜெட் படங்கள் இரண்டு வெளியாகிறது.

எஸ் சசிகுமார் இயக்கத்தில் பைன் ஜான் நடிப்பில் இங்கு மிருகங்கள் வாழும் இடம் என்ற படமும் நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. அதேபோல் யுவன் பிரபாகரன் நடிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகும் தொலைதூரம் படமும் நாளை வெளியாகிறது.

Advertisement Amazon Prime Banner