சினிமா மோகத்தால் திருமணத்தை தள்ளிப்போட்ட 7 நடிகைகள்.. ஆன்ட்டி வயதில் லவ் மேரேஜ் செய்த நயன்!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இந்த பதிவில் திருமண வயதை கடந்து தாமதமாக திருமணம் செய்த நடிகைகளைப் பற்றி காணலாம். சினிமாவில் இருக்கும் காரணத்தால் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் தங்களது திருமணங்களை தள்ளிப்போடுவது இயற்கை. வாருங்கள் அந்த வரிசையில் தற்போது காணலாம்.

காஜல் அகர்வால்: மோதி விளையாடு எனும் திரைப்படம் மூலமாக அறிமுகமான காஜல் அகர்வால் தளபதி விஜய் அவர்களுடன் ஜில்லா, துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சில காலம் முன்னணி நடிகையாக இருந்த இவர் பார்க்க அழகான தோற்றமும் சிறப்பாக நடனமாடும் வல்லமையும் கொண்டவர். 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சிலு என்ற தனது காதலரை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 34. சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது கூட செய்தியாக வந்தது ஞாபகம் இருக்கலாம்.

சமந்தா: தமிழ் நடிகையான சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். விஜய், ஜீவா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா தெலுங்கில் நடிக்கும் போது நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்தார். 2017 ஆம் வருடம் அவருக்கு 30 வயதாகும் போது திருமணம் செய்து கொண்டார். சென்றவருடம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சமீரா ரெட்டி: வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. தெலுங்கிலும் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு 2014 ஆம் ஆண்டு முதல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அவர் திருமணம் செய்து போது அவருக்கு வயது 35

ஸ்ரேயா சரண்: சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி ஆகிய படங்களில் நாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். தமிழில் கதாநாயகியாக ஜெயம் ரவியுடன் மழை படம் மூலமாக அறிமுகமானார். இவர் ரஷ்ய டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி கொஸ்டீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2018 ஆம் வருடம் இவர் திருமணம் செய்துகொள்ளும்போது வயது 35.

அசின்: மலையாள நடிகையான அசின் தமிழில் சூர்யாவுடன் கஜினி படம் மூலமாக நல்ல பெயரை பெற்றார். உள்ளம் கேட்குமே, மஜா, காவலன் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் வயது 30.

சினேகா: புன்னகை அரசி சினேகா அவர்கள் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அச்சமுண்டு அச்சமுண்டு என்னும் திரைப்படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் பிறந்தது. 2012ஆம் ஆண்டு இவரது திருமணம் நடைபெற்றது அப்போது இவருக்கு வயது 30. ஒரு மகன் ஒரு மகள் உடன் இந்த தம்பதிகள் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா: இந்த லிஸ்டில் சமீபத்தில் இணைந்திருப்பவர் நயன்தாரா. சில நாட்கள் முன்னர் விக்னேஷ் சிவன் உடன் இவருக்கு திருமணம் நடந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நயன்தாரா இதற்கு முன்பே சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது நயன்தாராவிற்கு 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த லிஸ்டில் அடுத்த வருடமாவது திரிஷா, அனுஷ்கா, அஞ்சலி போன்ற மூத்த நடிகைகள் இணைவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

- Advertisement -