இளம் வயதில் இறந்து போன 5 ஹீரோக்கள்.. கண்ணீர் விட்டு கதறிய சந்தானம்

தமிழ் சினிமாவில் இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நல்ல பிரபலமான சில நடிகர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மற்றும் சில பிரச்சனைகளாலும் இறந்து போய் இருக்கிறார்கள். அதில் என்றுமே மறக்க முடியாத சில ஐந்து ஹீரோக்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த ஹீரோக்களை பற்றி நாம் பார்க்கலாம்.

முரளி: பொதுவாகவே இவருடைய நடிப்பு எதார்த்தமாகவும் ரசிகர்களை கவரும் வகையில் இவருடைய படங்கள் இருக்கும். இவரின் மிகப்பெரிய பலமே சாந்தமான நடிப்பை வெளிக்காட்டுவது தான். இவர் தமிழில் பூ விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பகல் நிலவு, வண்ணக் கனவுகள், இதயம், மணிக்குயில் என்றும் அன்புடன், பூமணி, பொற்காலம், சுந்தர ட்ராவல்ஸ் போன்ற படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். பின்பு இவர் கடைசியாக இவருடைய மகன் அதர்வாவின் பானா காத்தாடி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களிலேயே இவருக்கு அதிக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த படம் இதயம். பின்பு 2010 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிப்படைந்து இவருடைய 46 வயதில் உயிரிழந்தார்.

Also read: தம்பி கேரக்டர்னா முரளி தான் என்று நிரூபித்த 5 படங்கள்..பூமணியை பார்த்து எஸ் ஜே சூர்யா எடுத்த படம்

புனித் ராஜ்குமார்: கன்னட சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக வந்தார். இவருடைய தந்தைக்குப் பிறகு இவர்தான் சூப்பர் ஸ்டார் என அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்பட்ட வந்தார். இவருடைய நடனத்திற்கு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி பல ரசிகர்களை வைத்திருந்த இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலன் இன்றி 46 வயதில் இறந்து விட்டார்.

சேதுராமன்: இவர் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு தோல் சிகிச்சை மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்பு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் மூன்று ஹீரோக்களுடன் ஒரு ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில் கொஞ்சம் பிரபலமான பிறகு அடுத்ததாக வாலிப ராஜா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். பின்பு 2020 ஆம் ஆண்டு இரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் 36 வயதில் இறந்துவிட்டார்.

Also read: உயிர் நண்பனை சுமந்த சந்தானம்.. சேதுராமனின் கண்கலங்க வைக்கும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

சிரஞ்சீவி சார்ஜா: இவர் கன்னட திரைப்படத்தின் மிகப் பிரபலமான நடிகர். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்களான வரதநாயகா, விசில், சந்திரலேகா, ருத்ரதாண்டவ போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அடுத்த நாள் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவருடைய 35 வயதில் இறந்துவிட்டார்.

சுஷாந்த் சிங்: பாலிவுட்டின் சிறந்த நடிகரான சுஷாந்த் சிங் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான ஒரு நடிகர். இதற்கு காரணம் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வாழ்க்கை வரலாறு படத்தை நடித்தது தான். இந்த படம் தமிழில் அதிக வசூலை பெற்றது. யாரிடமும் எந்தவித வெறுப்பையும் சம்பாதிக்காத ஒரு நடிகர் என்ற பெயரை பெற்று வந்தவர். இந்நிலையில் சில பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also read: சுஷாந்த் சிங் மரணத்திற்குப்பின் அந்த வார்த்தையை கேட்டாலே பதறும் வாரிசு.. அஜித் தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்