Tamil Cinema News | சினிமா செய்திகள்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் நாயகன் டாக்டர் சேதுராமன் காலமானார்.. சந்தானத்தின் நெருங்கிய நண்பர்
சந்தானத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் ஹீரோவான சேதுராமன் நேற்று இரவு 12 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் எம்பிபிஎஸ் முடித்து விட்டு தோல் சிகிச்சை மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு சில தோல் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வீடியோவாக போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் மூன்று ஹீரோக்களுடன் ஒரு ஹீரோவாக நடித்து இருப்பார் இந்த படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதன் பின்னர் வாலிபராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

sethuraman
2016ஆம் ஆண்டு இவர் உமையாளை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்.
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் டாக்டராக இருந்து வந்தவர்தான் சேதுராமன்.
சேதுராமன் லீலா பேலஸ் ஹோட்டல் அருகிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வெறும் 36 வயது ஆன சேதுராமன் மாரடைப்பால் இறந்தது சினிமா நடிகர்கள் மட்டுமின்றி மொத்த தமிழ் நாட்டு மக்களையும் உறைய வைத்துள்ளது.
நடிகர் சதீஷ் அதை அப்பார்ட்மென்டில் வசித்து வருவதால் உடனடியாக இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார். மேலும் பல நடிகர் நடிகைகளும் இணையதளங்கள் வழியே தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
