தம்பி கேரக்டர்னா முரளி தான் என்று நிரூபித்த 5 படங்கள்..பூமணியை பார்த்து எஸ் ஜே சூர்யா எடுத்த படம்

நடிகர் முரளி தமிழ் சினிமாவில் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பொதுவாகவே இவர் நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார். அப்படி இவர் அண்ணன் மீது பாசத்தைக் காட்டும் தம்பியாக நடித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஆனந்தம்: என்.லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ்.ஏ ராஜ்குமார் இசை அமைத்திருக்கிறார். இதில் மம்முட்டியின், தம்பியாக முரளி நடித்திருப்பார். இக்கதை ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்களின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இந்த படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் அதிக அளவில் வசூல் செய்த படமாக ஆனது.

Also read: ஒரே நிமிடம், ஓன் லைனில் ஸ்டோரி முரளியிடம் ஓகே வாங்கிய டைரக்டர்.. சில்வர் ஜூப்ளி அடித்த படம்

சமுத்திரம்: கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சமுத்திரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ், காவேரி, அபிராமி, சிந்து மேனன் மற்றும் மோனல் நடித்திருப்பார்கள். இதில் மூன்று சகோதரர்கள் ஒரு தங்கையின் மீது பாசத்தை வைத்து அவரின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய சகோதரர்களை வைத்து கதை அமைந்திருக்கும். இக்கதையில் சரத்குமாரின் தம்பியாக முரளி நடித்திருப்பார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆனது.

அதர்மம்: ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு அதர்மம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளி, ரஞ்சிதா, நாசர் ஆகியோர் நடித்தார்கள். இதில் நாசரின் தம்பியாக முரளி நடித்திருப்பார். இக்கதையானது வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதையை எதார்த்தமாக திரையில் காட்டிய படமாகும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதில் வரும் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

Also read: முரளியால் ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 30 வருட நட்பால் சினிமாவை வெறுத்து ஒதுங்கிய இயக்குனர்

என் ஆசை மச்சான்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு என் ஆசை மச்சான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜயகாந்த் தம்பியாக முரளி நடித்திருப்பார். இப்படம் குடும்பம், பாசம், காதல் என கலவையாக அமைந்து ஒரு வெற்றி படமானது. இப்படத்திற்கு தேவா இசை அமைத்திருக்கிறார். இதில் உள்ள பாடல்கள் இப்பவும் நம் காதுக்கு ஒரு இனிமையான பாடல்களாக இருந்து வருகிறது.

பூமணி: இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு பூமணி திரைப்படம் வெளிவந்தது. இதில் முரளி, தேவயானி, பிரகாஷ்ராஜ், ரேஷ்மா ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு தம்பியாக முரளி நடித்திருப்பார். இதில் முரளி தேவயானியை கல்யாணம் செய்து விடுவார். பின்பு தேவயானி மீது ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ் அவரை அடையத் துடிப்பார். இதே போல தான் வாலி படத்திலும் எஸ்.ஜே சூர்யா கதையை அமைத்திருப்பார்.

Also read: குடும்ப நட்சத்திரமாக ஜொலித்த முரளியின் 5 படங்கள்.. கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்