வாய்ப்பு கேட்டது குத்தமா? அக்காவோடு சேர்ந்து தங்கச்சியையும் அடைய நினைத்த தயாரிப்பாளர்

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சினிமாவில் மாறாமல் இருக்கும் ஒன்று என்னவென்றால் தயாரிப்பாளர்கள், தங்களிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளம் நடிகைகளையும் இளம்பெண்களையும் அடைய நினைப்பது தான்.

இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் இந்தமாதிரி பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ஒரு சில நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போதுமென தயாரிப்பாளர்களிடம் நெருக்கமான உறவில் இருந்து வருவார்கள்.

ஆனால் சில நடிகைகளும் அதற்கு இணங்காமல் தானாகவே கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு இடத்தை அடைந்த பிறகு இது பற்றிய உண்மைகளை வெளிச்சொல்வார்கள். அப்படிப்பட்ட கொடூர சம்பவத்தை தான் சமீபத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர்.

சோனம் கபூர் நடிகர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா என்ற படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூர் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பட வாய்ப்புகளை தேடி கொண்டிருக்கும் போது ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் அவரை அடைய விரும்பினாராம்.

அதைப்போல் சோனம் கபூர் பட வாய்ப்பு கேட்க செல்லும் இடத்துக்கெல்லாம் உடன் அவரது தங்கையான ரியா கபூரையும் அழைத்து வருவாராம். இருவரும் மீதும் ஆசை கொண்ட அந்த தயாரிப்பாளர், சினிமாவில் உங்களைப் பெரியாளாக்குகிறேன் என்று கூறி அவருடைய ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தாராம்.

இத்தனைக்கும் சோனம் கபூர் ஒரு காலத்தில் இந்தி சினிமாவை தன்னுடைய கைக்குள் வைத்திருந்த அணில் கபூர் என்பவரின் மகள் என்பது தெரிந்தும் தயாரிப்பாளர் இப்படி நடந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

sonam-kapoor-cinemapettai
sonam-kapoor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்