உடல் அசைவிலேயே நகைச்சுவையை தூண்டும் 5 காமெடியன்கள்.. யாருக்குமே யாரும் சளைத்தவர் அல்ல

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களில் பார்வையாளர்களை சோறுவடைய செய்ய செய்யாமல் பார்த்துக் கொள்வது படத்தில் இடம்பெறும் நகைச்சுவை தான். அப்படி தனித்துவமான உடல் மொழிகளை கொண்ட 5 காமெடியன்கள் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த 5 பிரபலங்களும் யாருக்குமே யாரும் சளைத்தவர் அல்ல.

சிங்கமுத்து: பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர், 1997 ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் அதன் பிறகு வந்த நீ வருவாய் என, ராஜா ராணி போன்ற படங்களில் படங்களிலும் தன்னுடைய உடல் அசைவாலேயே ரசிகர்களுக்கு நகைச்சுவை உணர்வை தூண்டியவர். அதிலும் வடிவேலுவுடன் இவர் செய்த காமெடி அல்டிமேட் ஆக இருக்கும்.

Also Read: 65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

தம்பி ராமையா: முதலில் இயக்குனராக வலம் வந்த இவர், அதன் பிறகு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்ற நகைச்சுவை படத்தை இயக்கிய பிரபலமானார். அதன் பின் கும்கி, கழுகு, தலைவா போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் இவர் மைனா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தனித்துவமான உடல் அசைவிலேயே இவரைப் பார்த்ததும் பலருக்கும் சிரிப்பு வரும்.

லொள்ளு சபா சுவாமிநாதன்: இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஏகப்பட்ட நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். அதிலும் இவரது சிறப்பு என்னவென்றால் படத்தில் இவருடைய தனித்துவமான உடல் அசைவு தான் வெகு சீக்கிரமே பார்ப்போருக்கு சிரிப்பை தூண்டிவிடும்.

Also Read: விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

பவர் ஸ்டார் சீனிவாசன்: பெரும்பாலும் இவருடைய இயற்பெயரே யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு பவர் ஸ்டார் ஆக ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்த இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். முதலில் லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்த இவர், அதன் பிறகு சந்தானம் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் அக்குபஞ்சர் மருத்துவர். இருப்பினும் படங்களில் வெகுளியான இவரது பேச்சும் உடல் அசைவும் பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும்.

மயில்சாமி: முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக சினிமாவிற்கு என்று கொடுத்த இவர் அதன் பிறகு நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தார் அதிலும் நான் அவன் இல்லை தூள் கில்லி தேவதையை கண்டேன் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் எல்லாம் இவர் தன்னுடைய உடல் அசைவாலேயே நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்

Also Read: நடிகைகளை வளைக்க வடிவேலு சொன்ன கேவலமான பொய்.. தோலுரித்த சிங்கமுத்து

இவ்வாறு இந்த 5 காமெடி நடிகர்களும் ஏறத்தாழ எல்லோரும் ஒரே வயது உடையவர்கள். அத்துடன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது தான் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்