சிறுத்தை சிவாவுக்கு அழைப்பு விடுத்த அஜித்.. சைடு கேப்புல சூர்யாவுக்கு கொடுத்த டிப்ஸ்

Suriya : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா படம். 3d அனிமேஷனில் உருவாகும் இந்த படம் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்து வருபவர் தான் சிறுத்தை சிவா. மேலும் அஜித்தின் குட் புக்கில் எப்போதும் சிறுத்தை சிவாவின் பெயரும் இடம்பெறும். கங்குவா படத்தின் டீசரை பார்த்து விட்டு அஜித் மிரண்டு உள்ளார்.

சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டி இருக்கிறார். அதோடு சூர்யாவின் டெடிகேஷன் சூப்பராக இருப்பதாக கூறியிருக்கிறார். கங்குவா படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்று அஜித் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறாராம்.

சூர்யாவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்

அதோடு சூர்யாவுக்கு சில அட்வைஸ் கொடுத்துள்ளார் அஜித். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலை விட நீங்கள் ஸ்கோர் பண்ணனும் என்று கூறியிருக்கிறார். சூர்யாவும் அதற்கு சிரித்துக் கொண்டே சரி என்று சொல்லி உள்ளாராம்.

மேலும் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற படங்கள் உருவாகி இருந்தது. கங்குவா பட டீசரை பார்த்து வியந்து போன அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் வருகின்ற மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படங்களில் அப்டேட் வெளியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்