எதிர்நீச்சல் சம்பளமே போதும்னு குணசேகரன் போட்ட எண்டு கார்டு.. கல்லாவை நிரப்ப மதயானையாய் மாறிய வேலராமமூர்த்தி

Ethirneechal Gunasekaran: சின்னத்திரையில் குணசேகரன் என்கிற பெயர் மூளை முடுக்கு எல்லாம் ஒலித்திருக்கிறது என்றால் அந்த கேரக்டரில் நடித்த மாரிமுத்துவின் கிண்டல் நையாண்டி கலந்த நெகட்டிவ் கதாபாத்திரம் தான். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை மாரிமுத்து மறைவிற்குப் பின் ஏற்று நடித்து வருபவர் வேலராமமூர்த்தி.

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நடிகர், வில்லன் என பன்முகத் திறமையை காட்டி வெள்ளி திரையில் கால் தடம் பதித்தார். அதிலும் இவர் நடித்த மதயானை கூட்டம் இவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது. இதனை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொண்டு வந்தார்.

அப்படிப்பட்டவர் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் கிடைத்ததும் இதில் கிடைத்த சம்பளமே போதும் என்று வெள்ளித்திரைக்கு எண்டு கார்டு போட்டு விட்டார். பொதுவாக இவர் நடிக்கும் படங்கள் மாதத்திற்கு மூன்று நான்கு என எப்படியாவது ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் இதைவிட சீரியலில் வாரத்திற்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை கிடைக்கிறது என்று இதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

தந்திரமாக செயல்படும் வேலராமமூர்த்தி

அந்த வகையில் இந்த சீரியல் முடியும் வரை வெள்ளி திரையை கொஞ்சம் ஒதுக்கி விட்டார். அதே மாதிரி இவருடைய கல்லாவை நிரப்பதற்கு இன்னொரு கதவும் திறக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீரியலை பொருத்தவரை உடனே முடியிர விஷயம் கிடையாது. வருஷக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டே போகும். அதனால் அதன் மூலம் பெருத்த லாபம் கிடைத்துவிடும்.

தற்போது அதே மாதிரி வெப் சீரியசிலும் அடுக்கடுக்காக தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதில் கமிட் ஆக்கிக் கொண்டு வருகிறார். சீரியல் மாதிரி வெப் சீரிஸ்க்கும் அவ்வப்போது கால் சீட்டு கொடுத்தால் மட்டும் போதும். அதன் மூலம் பணத்தை நிரப்பி விடலாம்.

சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோவில் இவருடைய நடிப்பில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரியஸ் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில் இவருடைய கதாபாத்திரம் கலிய பெருமாள். இதனைத் தொடர்ந்து இன்னும் ரெண்டு வெப் சீரியஸில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News