லாஸ்ட் சான்ஸ்ன்னு தளபதி 69 சம்பளத்தில் விஜய் வைத்த செக்.. மொத்தமாய் உறைந்து போன தயாரிப்பு நிறுவனம்

Actor Vijay : தளபதி விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது. ஏனென்றால் விஜய் தளபதி 69 படத்தில் நடித்துவிட்டு முழு நேரமாக அரசியலில் செயல்பட இருக்கிறார்.

அதாவது வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட இருக்கிறார். இதனால் விஜய்யின் கடைசி படத்தை தயாரிக்க பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் இருந்தது.

தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி தன்யா இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது லாஸ்ட் படம் என்பதால் விஜய்யின் சம்பளம் 200 கோடி வேண்டும் என்று டிமாண்ட் வைத்துள்ளனர்.

தளபதி 69 இல் விஜய்யின் சம்பளம் 200 கோடி

மேலும் ஒரு நடிகருக்கு 200 கோடி சம்பளம் கொடுக்கும் அளவுக்கு டிவிவி நிறுவனம் தாங்க முடியாது என இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த சம்பளத்தை கேட்டு ஆரம்பத்தில் தயாரிப்பு நிறுவனம் உறைந்து போய் தான் உள்ளது. ஆனாலும் பாக்ஸ் ஆபீஸ் கிங் அதாவது வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்யின் படங்கள் எப்போதுமே வசூல் சாதனை படைக்கும்.

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் விஜய்யின் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் தளபதியின் கடைசி படத்தை தயாரிப்பது ஒரு சரித்திரமாக வரும் காலத்தில் அமையும் என்பதால் கண்டிப்பாக இந்நிறுவனம் அந்த வாய்ப்பை நழுவ விடாது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்