Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-mohini

Entertainment | பொழுதுபோக்கு

வந்த வேகத்தில் காணாமல் போன 90’s கனவுக்கன்னி மோகினி.. விவாகரத்துக்கு பின் தடம் புரண்ட வாழ்க்கை!

தான் நடித்த முதல் படமே நல்ல ஒரு பெயரை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து படங்கள் வந்து குவியவே இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஒரு ரவுண்ட் வந்தார். படங்கள் எல்லாமே இவருக்கு நல்ல ஒரு நடிகை என பெயரை வாங்கித் தந்ததே தவிர, பெரிய இடத்திற்கு கொண்டு செல்லவில்லை.

மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். 90களில் அனைத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.

மோகினி 1991 ஆம் ஆண்டு ஈரமான ரோஜாவே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது. மோகினி நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

பின்னர் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு பரத் என்னும் தொழிலதிபரை கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார்.

Mohini-Family-Cinemapettai.jpg

Mohini-Family-Cinemapettai.jpg

பின்னர் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவ்விருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விண்ணப்பித்தார். இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். பிறப்பில் இந்து வான மோகினி தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக இருந்து வருகிறார்.

mohini

mohini

Continue Reading
To Top