விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் தான் மைனா நந்தினி. இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மைனாவிற்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இரண்டாவதாக பிரபல சீரியல் நடிகரும், நடன இயக்குனருமான யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் யோகேஷ்-நந்தினி இருவரும் விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மனைவிகளை கணவர்கள் சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்ற சுற்று நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்றை யோகேஷ் நந்தினிக்கு அளித்தார்.
என்னவென்றால் நந்தினியின் முகத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியிருந்தார் யோகேஷ். இதற்கு காரணம் என்னவென்றால், நந்தினி பலமுறை யோகேஷிடம் உங்களுக்கு என்னை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
அதற்கு பதிலாகத்தான் அவருடைய உருவத்தையே தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி உள்ளாராம் யோகேஷ். இப்படிப்பட்ட சர்ப்ரைஸ் பெற்ற மைனா மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் வாயடைத்துப் போய் விட்டனர்.