உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளிவரும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறுவதில்லை. அதேபோன்று அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களும் இன்னும் முடிந்த பாடில்லை. அந்த வகையில் லத்தி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் ரிலீசுக்கு தயாராகாமல் இருக்கிறது.

அதில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் பிரச்சினை அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் விஷாலால் நடந்து வருகிறதாம். இந்த படத்தில் நடிக்க கமிட்டான விஷால் கடந்த ஒரு மாதமாக சூட்டிங் போகாமல் டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.

Also read:சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

இதனால் தயாரிப்பாளர் பல கோடிகள் வரை நஷ்டம் அடைந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவர் நேராக விஷால் வீட்டிற்கே சென்று இது குறித்து சண்டையிட்டுள்ளார். ஆனாலும் அசராத விஷால் படம் தொடர்பாக இதுவரையிலும் எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லையாம்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத தயாரிப்பாளர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் மீது லைக்கா ப்ரொடக்ஷன் பண விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளது. அதற்கே இன்னும் சரிவர தீர்வு கிடைக்கவில்லை.

Also read:விஷாலுக்கு சொம்படிக்கும் நட்பு வட்டாரம்.. பலகோடி நஷ்டம், கண்டுகொள்ளாத விருமன்

அந்த விஷயத்திலும் விஷால் ரொம்பவும் மெத்தனமாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது. இதற்கும் அவர் வழக்கம் போல ஏதாவது ஒரு காரணம் சொல்லி எஸ்கேப் ஆகி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்த விவகாரத்திலும் உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்லி தப்பித்து விட்டாராம்.

இப்படி புகார் கொடுத்தும் விஷால் விஷயத்தில் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தயாரிப்பாளர் ரொம்பவே நொந்து போய்விட்டாராம். அடுத்து என்ன செய்வது என்று அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாக திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

Also read:பாக்கியராஜ்க்கு ஆப்பு வைத்த விஷால்.. இப்ப எல்லாம் நாங்க தான்

Next Story

- Advertisement -