பாக்கியராஜ்க்கு ஆப்பு வைத்த விஷால்.. இப்ப எல்லாம் நாங்க தான்

பாக்கியராஜ் அணியும் விஷால் அணியும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு போட்டியிட்டனர். அப்போது பலவித மோதல்களும் பல்வேறு விதமான பேச்சுகளுக்கும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர். மேலும் இறுதியாக இருவருக்கும் தேர்தல் போட்டி நடத்தப்பட்டு அதில் விஷால் அணியும் வெற்றி பெற்றது.

ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் கொஞ்சம் காலதாமதம் ஆவதால் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். அதற்கு விஷால் தரப்பினரும் அதற்கான பதிலையும் பின்பு முழு விளக்கத்தையும் கொடுத்து அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தனர்.

Also read: உதயநிதிக்கே அல்வா கொடுக்கும் விஷால்.. படாத பாடுபடும் பெரும் முதலாளிகள்

தற்போது நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்யத் பாக்யராஜ் தடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது பாக்யராஜுக்கு தற்போது நடிகர் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு தான் ஒவ்வொரு நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து பாக்கியராஜ் தேர்தல் பற்றியும் நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்புவது போல் பேசி வருவதாக கூறி வருகின்றனர். மேலும் நடிகர் சங்க விரோத நடவடிக்கையில் பாக்கியராஜ் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக நடிகர் சங்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

Also read: நாட்டாமையிடம் போன பஞ்சாயத்து.. நண்பர்களுக்கு எதிராக நியாயத்தை மீட்டு தருவாரா விஷால்

மேலும் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து செயற்குழுவில் ஆலோசித்து தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Also read: எல்லாத்தையும் திராட்டில் விட்ட விஷால்.. நம்பியதெல்லாம் வீணா போச்சு

சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாக்கியராஜ் சங்கத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்பதற்கு தங்கள் பதிலை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் தங்கள் பதிலில் திருப்தி அளிக்கப்படாவிட்டால் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News