சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

சமீபகாலமாக சிம்பு தான் நடிக்கும் படங்களுக்காக கடின உழைப்பை கொடுத்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக அவர் தன்னுடைய எடையை வெகுவாக குறைத்தார். மேலும் படத்தில் அவருடைய அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரையில் சிம்புவின் மீது ஏகப்பட்ட புகார்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது படப்பிடிப்பிற்கு சரியாக வருவது கிடையாது போன்ற பல சர்ச்சைகள் அவர் மேல் எழுந்தது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் கைநழுவி போனது.

Also read:மாநாடு வசூலை முறியடித்த வெந்து தணிந்தது காடு.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

தற்போது அதையெல்லாம் தாண்டி வந்துள்ள சிம்பு தன்னுடைய ரீ என்ட்ரி மூலம் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருடைய இடத்தை நடிகர் விஷால் தற்போது பிடித்து விட்டதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. நடிகர், தயாரிப்பாளர் என்று பிசியாக இருக்கும் விஷாலின் மீது தற்போது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். அவரால் பாதி நாட்களுக்கு மேல் படத்தின் சூட்டிங் நடைபெறாமல் தள்ளிப் போயிருக்கிறது. இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

Also read:விஷாலுக்கு சொம்படிக்கும் நட்பு வட்டாரம்.. பலகோடி நஷ்டம், கண்டுகொள்ளாத விருமன்

இது குறித்து அவர்கள் விஷாலிடம் தெரிவித்த பிறகும் கூட அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கிறாராம். அதனால் பொறுத்து பார்த்த தயாரிப்பாளர் தற்போது விஷால் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே விஷாலுக்கு லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது. இது நீதிமன்றம் வரை சென்று அந்த பஞ்சாயத்து இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் மீது மீண்டும் ஒரு பஞ்சாயத்து வந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read:விஷாலின் குடுமியை பிடித்து ஆட்டிய நீதிமன்றம்.. அதிரடி உத்தரவை போட்ட நீதிபதி

Next Story

- Advertisement -