வடிவேலு பேசியதை மனதில் வைத்துக்கொள்ளாமல் கேப்டன் சொன்ன வார்த்தை.. இப்படி ஒரு நல்ல மனுசனா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் நல்ல மனிதராகவும் வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு பிரபல அரசியல் கட்சி ஒன்றிற்காக அவரை அநியாயத்திற்கு மோசமாக பேசிய வடிவேலு கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக வளர்ந்தார். ஆனால் வடிவேலு பிரச்சாரம் செய்த பிரபல கட்சி பெரிய அளவு சரிவை சந்தித்தது. அதன்பிறகு வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

சினிமாவுக்கு நிறைய நல்லது செய்த மனிதர்கள் லிஸ்டில் விஜயகாந்துக்கு மிகப்பெரிய இடமுண்டு. அதன் காரணமாகவே வடிவேலுவை ஒதுக்கி விட்டதாக கூறுகின்றனர். தற்போது மீண்டும் அவர் பிரச்சாரம் செய்த பிரபல கட்சி ஆட்சியை பிடித்துள்ளதால் சமீபத்தில் 5 லட்சம் நிவாரண நிதி கொடுத்து விட்டு மீண்டும் பல படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளதாக பேட்டி கொடுத்தார்.

ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர் தேர்தலில் தன்னைப்பற்றி அசிங்கமாகவும் மரியாதை இல்லாமல் பேசியதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இரண்டு வருடம் கழித்து வடிவேலுவின் நண்பர் சுப்புராஜ் என்பவரிடம் வடிவேலுவை சீக்கிரம் சினிமாவில் நடிக்க சொல்லு, காமெடியே இல்லை என கேட்டுக் கொண்டாராம்.

சுப்புராஜ் என்பவர் மருதமலை படத்தில் போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் சாரப்பாம்பு என்ற கதாபாத்திரத்தில் வருபவர். அந்த காமெடி பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. அவரும் வடிவேலுவும் ராஜ்கிரணின் ஆரம்ப கால கட்டத்திலிருந்து ஒன்றாகவே பயணித்து வருகிறார்களாம்.

அவரிடம்தான் விஜயகாந்த் அப்படி கேட்டதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் வடிவேலுவை சந்தித்து விஜயகாந்த் சொன்னதை பகிர்ந்து கொண்டாராம் சுப்புராஜ். அதைக் கேட்ட வடிவேலு ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

vadivelu-cinemapettai
vadivelu-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்