விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகஅறிமுகமானவர் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.இவர் தமிழ் 3 சீசன் சார் லவ் ஸ்டோரி மற்றும் மலையாளத்தில் உல்லாசம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றியாக ஓடிக் கொண்டிருக்கிற குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் பவித்ரா மற்றும் விஜய் டிவி புகழ் இருவரது காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓரளவிற்கு ரில் ஜோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் பவித்ரா ஊர் விழாக்கள் மற்றும் ரெக்கார்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனம் ஆடியுள்ளார். மேலும் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ராமர் மற்றும் பழைய ஜோக் தங்கதுரை பவித்ராவுடன் ஆடியுள்ளனர்.
தற்போது இவர்கள் ஆடிய ரெக்கார்ட் டான்ஸ் வீடியோ ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி மூலம் பவித்ராவிற்கு ஓரளவு ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதால் தற்போது அடுக்கடுக்காக படவாய்ப்புகள் வருவதாக வலைதளங்களில் தகவல்கள் வெளிவருகின்றன.
அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில்லிருந்து பல பிரபலங்கள் உருவாகி உள்ளதால் விரைவில் பவித்ராவும் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்து விடுவார்கள் எனவும் கூறிவருகின்றனர்.