ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

பிக்பாஸில் நாளை வெளியேற உள்ள கேமரா பைத்தியம்.. ஓட்டில் பிரியங்காவை பின்னுக்குத்தள்ளிய தாமரை

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி 18 போட்டியாளர்கள் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வார தொடக்கத்திலேயே வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் தொகுப்பாளர் மற்றும் நடிகருமான சஞ்சீவ் இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவராக அபிநய் உள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த 7 வாரங்களாக அபினை நாமினேசன் லிஸ்டில் இருப்பார். எலிமினேஷன் லிஸ்டில் கடைசி நபராக அபினை காப்பாற்றப்படுவார்.

இந்த வாரம் அபினை வீட்டின் தலைவராக உள்ளதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இந்த வார நாமினேசன் லிஸ்டில் பிரியங்கா, நிரூப், தாமரை, இமான், ஐக்கி பெரி மற்றும் பாவனி ஆகியோர் நாமினேட் லிஸ்டில் இருந்தார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இந்த ஆறு பேரில் ஐக்கி பெரி தான் டேஞ்சரஸ் ஸோனில் உள்ளார். இந்த வாரம்
1726550 ஓட்டுக்கள் வாங்கி தாமரை முதலிடத்தில் உள்ளார். தாமரைக்கு அடுத்தபடியாக பாவனி 1536600 ஓட்டுகள் வாங்கியுள்ளார். அதன் பிறகு விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா 1504250 வாக்குகள் பெற்றுள்ளார்.

நிரூப் 1088600 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக இமான் அண்ணாச்சி 1073450 வாக்குகள் பெற்றுள்ளார். கடைசியாக ஐக்கி பெரி 992700 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் இந்த இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐக்கி பெரி வெளியேற்றப்படுகிறார்.

- Advertisement -spot_img

Trending News