Entertainment | பொழுதுபோக்கு
சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் 7 தொகுப்பாளர்கள்.. முத்தத்தால் சிக்கிய டிடி
விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாகும். மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் பல்வேறு புதுவிதமான ரியாலிட்டி ஷோக்களை விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது. இந்நிகழ்ச்சிகளை பல தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி இருந்தனர். அவ்வாறு விஜய் டிவியில் உள்ள தொகுப்பாளர்கள் சர்ச்சையில் சிக்கிய சம்பவங்களைப் பார்க்கலாம்.
ஜாக்குலின் : விஜய் டிவியில் ரக்சன் உடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் 18+ MMS சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அது ஜாக்லின் தான் என கூறி சர்ச்சை எழுந்தது.
ரம்யா : தமிழ் உச்சரிப்புகளை அழகாக உச்சரிக்க கூடியவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் ஜெகனுடன் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு சில காரணங்களால் இவர்களுக்கு விவாகரத்தானது.
மைனா நந்தினி : வம்சம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்தினி. அதன் பிறகு விஜய் டிவியில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் நந்தினி, கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
கோபிநாத் : விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் கோபிநாத். தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய பெரும்பான்மையான உண்மைகள் தவறானவை என மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
பாலாஜி : ஈரோடு மகேஷ் உடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தாடி பாலாஜி. அவரது மனைவி நித்யா, பாலாஜி மீது குற்றம்சாட்டி வந்தார். அதன்பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தனது மனைவியுடன் பங்கு பெற்றார். மேலும் இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்து நிரந்தரமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
ஜெகன் : அது இது எது நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நண்டு ஜெகன். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது சில அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.
திவ்யதர்ஷினி : டிடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அவார்டு நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமலஹாசனை முத்தமிடச் சொன்னார். அப்போது இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
