புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அனாதை போல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ் ஏ சந்திரசேகர்.. என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் சில காலமாக இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பது நாம் அறிந்தது . விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைவர்கள் நினைப்பது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றுவது போன்ற விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது அன்று முதல் இன்று வரை தனது தந்தையுடன் பேசுவதில்லை என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

மாஸ்டர் படம் நடித்துக் கொண்டிருந்த போது கூட தன் தாயை மட்டும் சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் விஜய். இதன் மூலம் தனது தந்தையின் செயல்பாடுகள் விருப்பமில்லை என்று சூசகமாக தெரிவித்தார். விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூட விஜய் பேசுவதில்லை என்றும், வீட்டிற்கு வந்து சந்தித்ததில்லை என்றும் மாதம் ஒரு முறையாவது வீட்டுக்கு வந்து எங்களை பார்த்து விட்டுப் போக வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பிறந்தநாள் விழா கொண்டாடினார். அவரும் அவரது மனைவி ஷோபனாவும் அனாதை போல் தனியாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் கூட கோபம் கொண்டனர். தந்தைக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்க கூட விஜய்க்கு நேரம் இல்லையா என்று வருத்தப்பட்டனர்.

இதுபற்றிய சந்திரசேகரிடம் கேட்டபோது விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். என்னை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களுக்கு விஜய் மட்டுமே தெரியும் என்னை அப்பாவாக நினைத்து என் கூடவே இருக்கின்றனர். எப்படியாவது விஜய் மக்கள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் நீர்த்துப் போய்விட்டது வலுவிழந்து விட்டது என்று கூறினார்.

அரசியல் கட்சிக்கு உண்டான தகுதி இருந்த ஒரு அமைப்பாக இருந்தது விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் நேரங்களில் பல கட்சிகள் தங்களை அணுகியதாகவும் அவர் கூறினார். இப்படி இருந்த இயக்கத்தில் காசு கொடுத்தால் பதவிகள் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது நான் பட்ட கஷ்டத்திற்கு மேலும் கஷ்டத்தை சேர்ப்பதாக வருத்தமடைந்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

- Advertisement -

Trending News