உடல் மெலிந்து காணப்பட்ட வடிவேலு.. லீக்கான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேல். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

வடிவேல் காமெடியனாக பல படங்கள் நடித்திருந்தாலும் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார் அப்படி இவர் ஹீரோவாக நடித்து வெளியான 23 புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் 24ஆம் புலிகேசி எனும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலு இடையே சில மோதல்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஷங்கர் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளித்ததன் பெயரில் வடிவேல் எந்த படமும் நடிக்க கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

vadivelu
vadivelu

வடிவேலு நடிப்பில் வெளியான காமெடிகள் அனைத்துமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தன. அதனால் வடிவேலு படங்களில் நடிப்பார் என பலரும் கூறி வந்தனர். தற்போது வடிவேலு வெப்சீரிஸ் ஒன்றில் காமெடியாக நடித்து வருகிறார்.

வடிவேலு அதன் பிறகு தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் எனக் கூறினர். தற்போது வடிவேல் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது வடிவேல் சக நடிகருடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் வடிவேலுவுடன் உடல் மெலிந்து காணப்படுவதாக ரசிகர்கள் பலரும் கூறியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்