டாப் 5 காமெடி நடிகர்கள் நடித்த மொத்த படங்கள்.. கவுண்டமணிக்கு பயங்கர டஃப் கொடுத்த வடிவேலு

ஒரு படத்தின் வெற்றி என்பது அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகிகளை தவிர அதில் நடிக்கும் காமெடி நடிகருக்கும் அதிக பங்கு உண்டு. ஏனென்றால் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரசிகர்களை போரடிக்காமல் படத்தை பார்க்க வைப்பது காமெடி நடிகர்கள்தான். அந்த வகையில் கோலிவுட்டில் டாப் 5 காமெடி நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதில் கவுண்டமணி மற்றும் வடிவேலு மற்ற காமெடி நடிகர்களுக்கு பயங்கரத்தப் கொடுத்திருக்கிறார்கள் கொடுத்திருக்கிறார்.

கவுண்டமணி: சுமார் 10 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாகவும், வில்லனாகவும் குணசித்திர வேதங்களிலும் நடித்த கவுண்டமணி பெரும்பாலும் ரசிகர்களை காமெடியனாகவே மகிழ்வித்து இருக்கிறார். அதிலும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கும் கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன் போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது. மேலும் கவுண்டமணி செந்திலின் காம்போ படத்தில் அல்டிமேட் ஆக ஒர்க் அவுட் ஆகியிருக்கும். இதுவரை கவுண்டமணி சுமார் 750 படங்களில் நடித்து மற்ற எந்த நடிகர்களையும் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்கு பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார்.

Also Read: கவுண்டமணி ஹீரோவாக நடித்த 5 திரைப்படங்கள்.. மார்க்கெட் இழந்ததால் ஜோடி போட்ட ஹீரோயின்

வடிவேலு: வைகை புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு, 1988 ஆம் ஆண்டு என் தங்கை கல்யாணி படத்தில் மூலம் முதல் முதலாக அறிமுகமானார். இவர் தன்னுடைய வசனத்தின் உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழி போன்றவற்றாலேயே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இதுவரை வடிவேலு மொத்தம் 300 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக்: பெரும்பாலும் இவர் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை போன்றவற்றை பாமர மக்களுக்கு தன்னுடைய நகைச்சுவை மூலம் ஆணித்தரமாக அடித்துச் சொல்லுவார். இதனால் இவரை சின்ன கலைவாணர் மற்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அழைப்பார்கள். இதுவரை விவேக் 220 படங்களில் நடித்துள்ளார்.

செந்தில்: திறமைக்கு அழகு முக்கியமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கவுண்டமணியுடன் இணைந்து நடித்த செந்தில் அதன் பிறகு இவர்களது காம்போவில் எக்கச்சக்கமான படங்கள் வெளியாகி ரசிகர்களை குதூகல படுத்தியது. இதுவரை செந்தில் 194 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also Read: இறந்து போன 5 ஹீரோக்களின் கடைசி படம்.. கடைசிவரை ஒருதலை காதலனாக சுற்றி திரிந்த இதயம் முரளி

யோகி பாபு: தற்போது வெளியாகும் படங்களில் எல்லாம் எங்கு பார்த்தாலும் யோகி பாபு தான் என்று கூறும் அளவுக்கு கவுண்டமணி, செந்தில், வடிவேலு வரிசையில் இன்றைய தலைமுறைகளின் டாப் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இருவரை யோகி பாபு 174 படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் காமெடியில் பிச்சு உதறுவதில் ஒருவர் மற்றொருவருக்கு சளைத்தவர்கள் அல்ல. அதிலும் இவர்களுக்கு என்று தனித்தனி ஸ்டைலும் உள்ளது. குறிப்பாக காமெடி திரை உலகில் கவுண்டமணி மற்றும் வடிவேலு இருவரும் இன்றுவரை வளரும் இளம் காமெடியன்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்